சித்திரா, த.நா. குமாரஸ்வாமி

வங்காள மொழியில் சரணதாஸ் கோஷ் எழுதிய நாவலின் தமிழாக்கம் ‘சித்திரா’. மொழிபெயர்ப்பாளர்: அந்தக் காலத்தில் நிறைய வங்க நாவல்களை மொழியபெயர்த்த த.நா. குமாரஸ்வாமி. பெரிய மனிதர் என்று அவர் பெயரைத்தான் அட்டையில் போட்டிருக்கிறார்கள். வெளியீடு: வேல் புத்தக நிலையம், ராயப்பேட்டை, சென்னை. ஆண்டு 1957. ஓவியர் பெயரைக் காணவில்லை.

கலைஞர் காளிமுத்து

பேராசிரியர் B. Mulkh Raj Anand எழுதிய Kashmiri Shastra. வெளியிட்டது Anand Book Depot. அனேகமாக 1940களிலோ அதற்கு முன்போ வந்த டாக்டர் காளிமுத்து வகை புத்தகம். படங்களை அனேகமாக ‘இன் ஹவுஸ்’ கலைஞர் யாராவது வரைந்திருப்பார். அட்டைப் படத்தை யார் வரைந்தார்களோ. கடைசி படத்தில் உள்ள சிற்றுரைகள் இந்தப் புத்தகத்திற்கு நல்ல முன்னோட்டத்தைத் தருகின்றன.

போலித் தங்கம், லேகியம், களிம்பு, குளிகை வகையறாக்களுக்கு உள்ளே இருக்கும் விளம்பரங்களில் விலைகள் ரூபாய் மற்றும் அணா கணக்கில் தரப்பட்டிருக்கின்றன (பெரும்பாலான விளம்பரங்களைத் தந்திருப்பது அமிர்தசரஸின் ‘Imperial Chamber of Science’).

விவேக போதினி

1908 வாக்கில் தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிகையின் ஆண்டு மலருக்கு/இதழ் தொகுப்புக்கு/சிறப்பிதழுக்கு 1916இல் வந்த விளம்பரம். மேற்கத்திய பாணி அலங்கார வடிவமைப்பு. இந்த இதழ் வந்த சமயத்தில் மேற்கத்தியர்கள் இந்த மாதிரி வடிவமைப்பை நிறுத்திவிட்டார்கள் அல்லது நிறுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

வர்ணாசிரமத்தைப் போற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது. பயங்கரமான பார்ப்பனீயப் பத்திரிகை. The Hindu, சுதேசமித்திரன், வைசியமித்திரன் ஆகிய பத்திரிகைகளின் பாராட்டுரைகளுடன் கூடியது. முழு இதழும் இங்கு கிடைக்கிறது.

நன்றி: நாள் ஒரு நூல்