சிவகாமியின் சபதம்

கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ 1944இல் கல்கி பத்திரிகையில் தொடராக வந்தது. நாவலுக்கு வர்மா வரைந்த ஓவியங்கள் இவை (எல்லாம் முதல் பாகத்திலிருந்து). ஒரு சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் வர்மாவை உலகின் மிகப் பெரிய illustratorகளில் ஒருவர் என்று சொல்லலாம்.

பொன்னியின் செல்வனுக்குப் படம் வரைந்த இன்னொரு மாபெரும் ஓவியர் மணியம் கூட ஒரு அத்தியாயத்திற்கு சில கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார். இந்தத் தொடர்கதை பைண்டிங் புத்தகம் உடையா நிலையில் இருந்திருந்தால் இன்னும் பல படங்களை ஸ்கேன் செய்திருக்கலாம்.

மிஷா

படம்: Viktor Trinchenko

படம்: A. Sukhov

படம்: Sergei Kravchenko

படம்: Valentin Rozantsev

படம்: Dmitry Barabash

படம்: Sergei Kravchenko

படம்: E. Desiatnik

நம்மில் பலரது குழந்தைப் பருவத்தில் Misha என்ற ஆங்கில சிறுவர் மாத இதழுக்கு மறக்க முடியாத இடம் இருக்கும். சோவியத் பதிப்பகங்கள் நமக்கு அருமையான புத்தகங்களைத் தந்துகொண்டிருந்தபோது இந்தப் பத்திரிகையும் மாஸ்கோவிலிருந்து இறக்குமதியாகிக்கொண்டிருந்தது.

மிஷாவில் படக்கதைகள், அறிவுக் கட்டுரைகள், புதிர்கள், விடுகதைகள், விளையாட்டுகள், துணுக்குகள் எல்லாம் வண்ணமயமாக இருந்தன. உலக மாயாஜால, நாட்டுப்புறக் கதைகள் ஏராளமானவற்றை மிஷா படக்கதைகளாகத் தந்தது.

ராதுகா, மீர் பதிப்பகங்கள் உருவாக்கியிருந்த கனவுலகில் காணக்கிடைத்த காட்சிகள் மிஷாவிலும் இருந்தன. மிஷாவுக்காக வரைந்தவர்கள் ராதுகா, மீர் புத்தகங்களுக்கும் வரைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

சில இதழ்களில் Just You Wait! என்ற படக்கதை வந்தது. இது Tom and Jerryஇன் தழுவல் போல. ருஷ்யாவில் மிகப் பிரபலமான இந்தக் கதைத் தொடர் 80களில் அனிமேஷன் தொடராக தூர்தர்ஷனில் ஞாயிறு காலை ஒளிபரப்பப்பட்டது (அப்போதெல்லாம் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நல்ல வெரைட்டி இருந்தது).

சிறு வயதில் சந்தா கட்டியிருந்ததால் மாதம் தவறாமல் கிடைத்தது. சந்தா தொகையை தில்லி முகவரி ஒன்றிற்கு அனுப்ப வேண்டியிருந்தது போல் நினைவு.

மிஷா, Soviet Union பத்திரிகையின் தயாரிப்பு. Nikolai Gribachevஐ முதன்மை ஆசிரியராகவும் Valentin Rozantsev, Nikolai Shcherbakov ஆகியோரை வெவ்வேறு சமயங்களில் தலைமைக் கலைஞராகவும் கொண்டு வெளிவந்த இந்தப் பத்திரிகை 1983இல் நிறுவப்பட்டிருக்கிறது. இப்போதும் தொடர்ந்து வெளிவருகிறது. ஆனால் நிர்வாகம் மாறிவிட்டிருக்கும். பழைய மிஷா போல் இருக்குமா என்றும் தெரியவில்லை.

மிஷாவுக்கு உலகெங்கும் தீவிர ரசிகர்கள் இருப்பதை இணையத்தில் பார்க்கலாம். இந்தப் பத்திரிகையின் பழைய இதழ்கள் மிகமிக அரிதாகத்தான் கிடைக்கின்றன.

ஒரு புண்ணியவான் இங்கும் இங்கும் முழுசாக இரண்டு இதழ்களை வலையேற்றியிருக்கிறார்.

டாக்டர்கள் நிரூபிக்கின்றனர்…

1952ஆம் ஆண்டு ‘கலைமகள்’ இதழ்களிலிருந்து சில திரேக ஆரோக்ய விளம்பரங்கள்.