வளர்ந்த கதைகள் – பகுதி 1
November 18th, 2009
லயன் காமிக்ஸுக்கு மரியாதை செய்வது போல் ஒரு பதிவு இது. 90கள், 2000களில் வந்த லயன், முத்து காமிக்ஸ் அட்டைகள் இவை. என்னிடம் ராணி காமிக்ஸும் 40 காசுக்கு விற்கப்பட்ட 16 பக்க மாயாஜால காமிக்ஸ் புத்தகங்களும் இருந்திருந்தால் அவையும் இங்கு இடம்பெற்றிருக்கும்.
மேலிருப்பதன் பின்னட்டை…
அடுத்த பகுதியில் கௌபாய் அல்லாத க்ரைம், துப்பறியும், சாகசக் கதைகள்.
சோவியத் வேட்டை
June 17th, 2009
Hunting and Angling in the USSR என்ற விளம்பரச் சிறுநூலிலிருந்து. Intourist என்ற சோவியத் ருஷ்ய நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஓவியரின் பெயரையும் தேதியையும் காணோம். வழக்கம் போல 80, 90களில் வந்திருக்கலாம்.
________
________
________
________
1929இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போதும் முன்னணி சுற்றுலா நிறுவனம். சோவியத் காலம் பற்றிக் கொஞ்சம் போல் தகவல்.
மிஷா
May 26th, 2009
படம்: Viktor Trinchenko
படம்: A. Sukhov
படம்: Sergei Kravchenko
படம்: Valentin Rozantsev
படம்: Dmitry Barabash
படம்: Sergei Kravchenko
படம்: E. Desiatnik
நம்மில் பலரது குழந்தைப் பருவத்தில் Misha என்ற ஆங்கில சிறுவர் மாத இதழுக்கு மறக்க முடியாத இடம் இருக்கும். சோவியத் பதிப்பகங்கள் நமக்கு அருமையான புத்தகங்களைத் தந்துகொண்டிருந்தபோது இந்தப் பத்திரிகையும் மாஸ்கோவிலிருந்து இறக்குமதியாகிக்கொண்டிருந்தது.
மிஷாவில் படக்கதைகள், அறிவுக் கட்டுரைகள், புதிர்கள், விடுகதைகள், விளையாட்டுகள், துணுக்குகள் எல்லாம் வண்ணமயமாக இருந்தன. உலக மாயாஜால, நாட்டுப்புறக் கதைகள் ஏராளமானவற்றை மிஷா படக்கதைகளாகத் [...]


