The Fir Tree
April 28th, 2009
ஹான்ஸ் க்ரிஸ்டியன் ஆண்டர்சனின் ‘The Fir Tree’ என்ற கதையின் புத்தக வடிவத்திற்கு நான்சி எக்ஹோம் பர்க்கர்ட் (Nancy Ekholm Burkert) வரைந்த ஓவியங்கள். Harper & Row, Publishers, நியூயார்க், 1970இல் வெளியிட்டது. முதல் பதிப்பு 1950. படங்கள் இந்தப் பதிப்பில் சேர்க்கப்பட்டன. மொழிபெயர்ப்பு: H.W. Dulcken. மேலிருப்பது அட்டை. கீழிருப்பது போன்ற பென்சில் ஓவியங்களும் இந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கின்றன. நான்சி எக்ஹோம் பர்க்கர்ட் சிறுவர் நூல்களுக்கு வரைந்த முக்கியமான ஓவியர்களில் ஒருவர். அமெரிக்காவில் [...]
ழ
April 16th, 2009
எழுபதுகளின் இறுதியில் தொடங்கி எண்பதுகளின் இறுதி வரை வந்த ‘ழ’ சிற்றிதழின் அட்டைகள். ஞானக்கூத்தன், ஆத்மாநாம், ஆர். ராஜகோபாலன் என்று வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு கவிஞர்கள் ஆசிரியராக இருந்தார்கள். ஆத்மாநாமின் மரணத்திற்குப் பின் சிறிது காலம் (ஆண்டுகள்?) நின்றுபோன பின் 1986இல் மீண்டும் வரத் தொடங்கிப் பிறகு நின்றது. 1992 வரை வந்த மாதிரி நினைவு. இந்தப் படங்கள் வெகுஜன வகையில் சேராதவை என்றாலும் வின்டேஜ் மதிப்புக்காக இங்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றன. (ஜனவரி 1981 இதழ்) மேற்கண்ட [...]
ஜலதீபம்
April 3rd, 2009
1970களில் குமுதத்தில் வந்த சாண்டில்யன் தொடர்கதைக்கு வர்ணம் வரைந்த ஓவியங்கள். மேலே இருக்கும் படம் 29-10-1970 தேதியிட்ட இதழில் வந்த முதல் அத்தியாயத்தில் இருக்கிறது. கீழ்க்கண்ட படங்கள் 1970-73 இடையில் வந்திருக்கலாம்.


