சிவகாமியின் சபதம்
May 28th, 2009
கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ 1944இல் கல்கி பத்திரிகையில் தொடராக வந்தது. நாவலுக்கு வர்மா வரைந்த ஓவியங்கள் இவை (எல்லாம் முதல் பாகத்திலிருந்து). ஒரு சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் வர்மாவை உலகின் மிகப் பெரிய illustratorகளில் ஒருவர் என்று சொல்லலாம். பொன்னியின் செல்வனுக்குப் படம் வரைந்த இன்னொரு மாபெரும் ஓவியர் மணியம் கூட ஒரு அத்தியாயத்திற்கு சில கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார். இந்தத் தொடர்கதை பைண்டிங் புத்தகம் உடையா நிலையில் இருந்திருந்தால் இன்னும் பல படங்களை ஸ்கேன் செய்திருக்கலாம்.
புனித பீட்டர்ஸ்பர்க் கதைகள்
May 14th, 2009
நிக்கலாய் கோகல் (Nikolai Gogol) எழுதிய Diary of a Madman, Nevski Prospect ஆகிய கதைகள் அடங்கிய Stories from St. Petersburg என்ற புத்தகத்திலிருந்து. ஓவியங்கள் Donia Nachshen. வெளியீடு: Lindsay Drummond Limited, லண்டன், 1945. மொழிபெயர்ப்பு: Beatrice Scott.
“புத்தகங்களைத் தீயால் கொல்ல முடியாது”
April 27th, 2009
1933இல் ஜெர்மனியில் நாஜிகள் தங்கள் சித்தாந்தத்திற்கு ஒத்துவராத புத்தகங்களை எரித்தார்கள். அதை எதிர்த்து அமெரிக்க அரசின் அச்சுத் துறை வெளியிட்ட சுவரொட்டிகளில் ஒன்று இது. 1942இல் வந்தது. வரைந்தவர் S. Broder. இவரைப் பற்றி விவரங்கள் கிடைக்கவில்லை. சுவரொட்டியில் இருக்கும் சொற்கள் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் உதிர்த்தவை. நன்றி: Library of Congress


