எல்லாம் பொம்மை
September 1st, 2009
1934இல் தொடங்கி பிரிட்டனின் மெக்கானோ நிறுவனம் வெளியிட்ட Dinky பொம்மைகளில் சில. பெரும்பாலும் வாகனங்கள். இவற்றின் வயது நிச்சயமாகத் தெரியவில்லை. 1930கள் முதல் 60கள் வரை இருக்கலாம். Ephemeraவையும் இந்த வலைப்பதிவு கவர் பண்ணுவதால் இந்த இடுகை. டிங்க்கி பொம்மைகள் பற்றி. மேலும் படங்களை இங்கே பார்க்கலாம்: http://mellorsandkirkcatalogues.co.uk/Catalogues/FS121208/page35.htm http://mellorsandkirkcatalogues.co.uk/Catalogues/FS121208/page36.htm http://mellorsandkirkcatalogues.co.uk/Catalogues/FS121208/page37.htm Source: Mellors & Kirk
மது, மாது, மாயாஜாலம்
August 3rd, 2009
உமர் கய்யாம் எழுதிய இந்தப் பாரசீகக் கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்புக்குப் படங்களை வரைந்தவர் Gordon Ross. மொழிபெயர்ப்பாளர் Edward Fitzgerald. இது மிகப் பிரபலமான மொழிபெயர்ப்பு. இந்தப் புத்தகம் 1956இல் வெளிவந்த இரண்டாம் Jaico Books பதிப்பு (முதல் பதிப்பு 1948). மொழிபெயர்ப்பு வெளிவந்தது 1859இல். கார்டன் ராஸ் 1873இல் ஸ்காட்லாந்தில் பிறந்தார். பதின்பருவத்தில் அமெரிக்காவிற்குச் சென்று படித்தார். பிறகு San Francisco Chronicle நாளிதழில் கலைப் பிரிவில் வேலை பார்த்தார். அதற்குப் பின் நியூயார்க்கிற்குச் [...]
கலைஞர் காளிமுத்து
June 2nd, 2009
பேராசிரியர் B. Mulkh Raj Anand எழுதிய Kashmiri Shastra. வெளியிட்டது Anand Book Depot. அனேகமாக 1940களிலோ அதற்கு முன்போ வந்த டாக்டர் காளிமுத்து வகை புத்தகம். படங்களை அனேகமாக ‘இன் ஹவுஸ்’ கலைஞர் யாராவது வரைந்திருப்பார். அட்டைப் படத்தை யார் வரைந்தார்களோ. கடைசி படத்தில் உள்ள சிற்றுரைகள் இந்தப் புத்தகத்திற்கு நல்ல முன்னோட்டத்தைத் தருகின்றன. போலித் தங்கம், லேகியம், களிம்பு, குளிகை வகையறாக்களுக்கு உள்ளே இருக்கும் விளம்பரங்களில் விலைகள் ரூபாய் மற்றும் அணா கணக்கில் [...]


