பணவீக்கத்தின் அழகியல்
April 16th, 2009
ஜெர்மனியில் 1921 முதல் 1923 வரை பொருளாதாரத்தைத் தலைகீழாக்கிய பயங்கரப் பணவீக்கத்தின்போது அச்சடிக்கப்பட்ட Notgeld (நெருக்கடிக் காலப் பணம்) காகிதப் பணம். இவற்றை வங்கிகள், நகராட்சிகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அச்சடித்தன. மேலும் விவரங்கள் இடுகையின் இறுதியில். 1922 மார்ச்சில் வந்த 2 மார்க் நோட்டு. பின்னால் ‘இரண்டு மார்க் மதிப்புள்ளது’ (Gut fur zwei mark) என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. 1830இல் பெர்லினில் இருந்த டாக்சியைக் காட்டுகிறது…
Le Rire, 1920
April 12th, 2009
Le Rire என்ற பிரெஞ்சு நகைச்சுவைப் பத்திரிகையின் 4 டிசம்பர் 1920 இதழின் அட்டை. ஓவியம் F. Fabiano. இவர் அந்தக் காலத்தில் பெரிய கை. ஏராளமான பிரெஞ்சுப் பத்திரிகைகளுக்கும் Life பத்திரிகைக்கும் கூட நிறைய வரைந்திருக்கிறார். இந்தப் படம் Michael Horsham எழுதிய ’20s & ’30s Style என்ற புத்தகத்திலிருந்து ஸ்கேன் செய்யப்பட்டது.
கோடுகள், கோடுகள், கோடுகள் (வா.இ.சி.ப.)
March 21st, 2009
முந்தைய பதிவில் இடம்பெற்ற தஸ்தயெவ்ஸ்கி உருவப் படங்களில் ஒன்றை வரைந்தவர் சோவியத் ருஷ்யாவின் ‘தேசியக் கலைஞர்’ Vladimir Andreevich Favorsky (1886—1964). பரவசமூட்டும் இவரது படைப்புகளில் சில (எல்லாமே க்ளிக் செய்தால் hi-res படங்களைக் காட்டுபவை)… புனித செர்ஜியஸ் மடாலயம், 1919. மரச் செதுக்கோவியம். P. Muratov எழுதிய Egeria என்ற புத்தகத்திற்காக 1921இல் உருவாக்கிய மரச் செதுக்கோவியம்: அதே புத்தகத்திற்காக இன்னொன்று: மேற்கண்ட செதுக்கோவியத்தில் குதிரை வண்டிப் பகுதியின் குளோஸ் அப்: Book of Ruthக்காக [...]


