பார்க்க, படிக்க…
August 25th, 2009
Blackie’s New Systematic English Readers வரிசையில் இரண்டாம் புத்தகம் இந்த Second Reader. குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள் அடங்கிய பாடநூல் (நான்-டீடெய்ல் வகையறா). வெளியீடு: Blackie and Son Limited, லண்டன். இணையத்தில் காணப்படும் தகவல்களின்படி 1913-1924 இடையே வெளிவந்திருக்கிறது. அலங்காரங்களின் பாணியும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவைதான்.
இந்தப் புத்தகத்தில் A.E. Jackson, H.R. Millar, T. Harrison, Frank Adams, A.A. Dixon உட்படப் பல பெரியோர் செதுக்கோவியங்களும் கோட்டோவியங்களும் வரைந்திருக்கிறார்கள்.
பிளாக்கீஸ் பாடநூல்கள் இன்னும் இரண்டு [...]
இத்தாலிய சுற்றுலா சுவரொட்டிகள்
July 3rd, 2009
எல்லாம் 1920 வாக்கில் வந்தவை. இத்தாலிய சுற்றுலாத் துறைக்காக உருவாக்கப்பட்டவை.
வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Grafia S.A.I.I.G.
வண்ண அச்சோவியம். உருவாக்கியவர்: Vittorio Grassi, Grafia.
வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Allessandro Pomi, Studio Editoriale Turistico
வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Richter & C.
வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Barabino e Graeve
வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Vittorio Grassi
விட்டோரியோ கிராஸ்ஸி, அலெஸ்ஸாண்ட்ரோ போமி ஆகியவை மட்டும் ஓவியர்களின் பெயர்கள்.
அனைத்தும் Library of Congress மற்றும் trialsanderrors உபயம்.
தேவதைகளின் பூமி
May 9th, 2009
Annie Rentoul Outhwaite எழுதிய The Little Green Road to Fairyland என்ற சிறுவர் நூலுக்கு அவரது சகோதரியும் புகழ்பெற்ற சிறுவர் நூல் ஓவியருமான Ida Rentoul Outhwaite (1888 – 1960) வரைந்த ஓவியங்களில் ஒன்று. இந்தப் புத்தகம் 1922இல் லண்டன் A & C Black பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
ஆஸ்திரேலியரான இடாவின் ஸ்பெஷாலிட்டி தேவதைகளை வரைவது. இவர் 1904இல் 15 வயதில் முதல் படத்தை வரைந்தார். அதுவும் அவர் சகோதரி எழுதிய கதைக்கு வரைந்ததுதான். [...]


