பார்க்க, படிக்க…
August 25th, 2009
Blackie’s New Systematic English Readers வரிசையில் இரண்டாம் புத்தகம் இந்த Second Reader. குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள் அடங்கிய பாடநூல் (நான்-டீடெய்ல் வகையறா). வெளியீடு: Blackie and Son Limited, லண்டன். இணையத்தில் காணப்படும் தகவல்களின்படி 1913-1924 இடையே வெளிவந்திருக்கிறது. அலங்காரங்களின் பாணியும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவைதான்.
இந்தப் புத்தகத்தில் A.E. Jackson, H.R. Millar, T. Harrison, Frank Adams, A.A. Dixon உட்படப் பல பெரியோர் செதுக்கோவியங்களும் கோட்டோவியங்களும் வரைந்திருக்கிறார்கள்.
பிளாக்கீஸ் பாடநூல்கள் இன்னும் இரண்டு [...]
கிரிம் சகோதரர்களின் கதைகள்
August 12th, 2009
நாட்டுப்புறக் கதைகளுக்கும் மாயாஜாலக் கதைகளுக்கும் பேர்போன Wilhelm Grimm, Jakob Grimm சகோதரர்களின் கதைகளின் தொகுப்பான Household Storiesக்கு Walter Crane வரைந்த ஓவியங்கள். ஜெர்மனிலிருந்து மொழிபெயர்ப்பு வால்டர் க்ரேனின் சகோதரி Lucy Crane. வெளியீடு: Macmillan & Co., Ltd., லண்டன், 1914.
வால்டர் க்ரேன் (1845-1915) ஏராளமான புத்தகங்களுக்குப் படம் வரைந்து புகழ்பெற்ற ஒரு பிரிட்டிஷ் ஓவிய மேதை. 1864இல் சிறுவர் நூல்களுக்குப் படம் வரையத் தொடங்கிய க்ரேனுக்குப் பல கலை இயக்கங்களில் பரிச்சயம் இருந்தது. [...]
விவேக போதினி
May 30th, 2009
1908 வாக்கில் தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிகையின் ஆண்டு மலருக்கு/இதழ் தொகுப்புக்கு/சிறப்பிதழுக்கு 1916இல் வந்த விளம்பரம். மேற்கத்திய பாணி அலங்கார வடிவமைப்பு. இந்த இதழ் வந்த சமயத்தில் மேற்கத்தியர்கள் இந்த மாதிரி வடிவமைப்பை நிறுத்திவிட்டார்கள் அல்லது நிறுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
வர்ணாசிரமத்தைப் போற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது. பயங்கரமான பார்ப்பனீயப் பத்திரிகை. The Hindu, சுதேசமித்திரன், வைசியமித்திரன் ஆகிய பத்திரிகைகளின் பாராட்டுரைகளுடன் கூடியது. முழு இதழும் இங்கு கிடைக்கிறது.
நன்றி: நாள் ஒரு நூல்


