சுவரொட்டிகள், ஓவியங்கள், அட்டைகள்…
August 31st, 2009
William Hardy எழுதிய A Guide to Art Nouveau Style என்ற புத்தகத்தின் ருஷ்ய மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்த படங்கள். முதல் பதிப்பு (ஆங்கிலம்) Quintet Publishing Limited, 1986. இந்த ருஷ்யப் பதிப்பு 1999இல் வந்தது போல் தெரிகிறது. 1890-1905 காலகட்டத்தில் உலகைக் கலக்கிய கலை இயக்கம்/பாணி ‘ஆர் நூவோ’ (பிரெஞ்சில் ‘புதுக் கலை’). Mucha என்று கையொப்பமிட்ட படங்களைப் பாருங்கள். இவற்றை உருவாக்கிய Alfons Mucha என்ற ஷெக் கலைஞர்தான் இந்த இயக்கத்தின் பிறப்பிடம். [...]
திருத்தொண்டர் பெரியபுராணம்.
April 25th, 2009
“சேக்கிழார்நாயனார் அருளிச்செய்த திருத்தொண்டர் பெரியபுராணம். இதை வசனச்சுருக்கமாக திருமயிலை வி-சுந்தரமுதலியாரால் தமது-சென்னை விக்டோரியாஜூலிபிரசில் பதிப்பிக்கப்பட்டது.” முதற்பதிப்பு. விலை: 10 அணா. 1893இல் மூன்று சித்திரங்களுடன் வந்த புத்தகம். இந்த வலைப்பதிவில் இருப்பதிலேயே மிகப் பழைய தமிழ்ப் புத்தகம் இதுதான். 50களிலோ 60களிலோ நேர்த்தியாக க்ளாத் பைண்டிங் செய்யப்பட்டிருக்கிறது. முதல் படத்தைக் கத்தரித்து எடுத்துவிட்டார்கள். படத்திலிருப்பது இடமிருந்து வலமாக: சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
வெட்டி வீரன்
April 8th, 2009
மெக்சிகோ நாட்டு ஓவியர் Jose Guadalupe Posadaவை கௌரவித்து அந்த நாடு 1963இல் வெளியிட்ட அஞ்சல் தலை. இந்தப் படம் அவர் 1895-1913 இடையே வரைந்தது. போசாடாவின் சித்திரங்கள், குறிப்பாக Don Quixote படங்கள், மிகப் பிரபலமானவை. படத்தை க்ளிக் செய்தால் பெரிதாகும். நன்றி: 80sAustin


