Christmas Roses
August 7th, 2009
Robert Ellice Mack எழுதிய Christmas Roses என்ற சிறுவர் பாடல் புத்தகத்திற்கு Lizzie Lawson வரைந்த ஓவியங்கள். வெளியீடு: Griffith, Farran & Company, லண்டன், 1886. ஓவியரைப் பற்றி விவரங்கள் தெரியவில்லை. ஆனால் பல புத்தகங்களுக்கு வரைந்திருக்கிறார் என்று தெரிகிறது. முழுப் புத்தகத்தையும் இங்கே இறக்கிக்கொள்ளலாம் என்பதுதான் விசேசம்.
Within Sight of the Snow
April 22nd, 2009
Within Sight of the Snow என்ற புத்தகத்தின் அட்டை. வரைந்தது பிரிட்டிஷ் கலைஞர் Edward Whymper (1840-1911). வெளியீடு Religious Tracts Society (RTS), லண்டன், 1889. அட்டைப்படம் வண்ணத்திலும் தங்க நிறத்திலும் emboss செய்யப்பட்டிருக்கிறது. கீழ்க்கண்ட படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்த்து இரசிக்க வேண்டியது. ரிலீஜியஸ் ட்ராக்ட்ஸ் சொசைட்டி, புகழ்பெற்ற Boy’s Own Magazine/Boy’s Own Annualஐ வெளியிட்ட நிறுவனம்.
லண்டன் பட்டணம் (சிறப்புப் பதிவு)
April 1st, 2009
1886இல் வந்த London Town என்ற சிறுவர் புத்தகத்திலிருந்து. படங்களை வரைந்தவர் Thomas Crane, Ellen Houghton. வெளியீடு: Marcus Ward & Co., லண்டன். இதே ஓவியர்களின் Abroad என்ற புத்தகத்தைப் பார்த்தபோது நான் பார்த்ததிலேயே மிக அழகான புத்தகம் அதுதான் என்று நினைத்தேன். ஆனால் இந்தப் புத்தகம் அதை மிஞ்சுகிறது. Abroad பற்றிய இடுகை


