சீனக் கோட்டோவியங்கள்
May 6th, 2009
‘ஜின் பிங் மெய்’ (Jīn Píng Méi) என்ற 16ஆம் நூற்றாண்டு சீன நாவலிலிருந்து. ஓவியர் பெயர் தெரியவில்லை. மிக விரிவான பாலியல் வர்ணனைகளுடன் கூடிய இந்த நாவல் 1610இல்தான் புத்தக வடிவில் வந்திருக்கிறது. கோட்டோவியங்கள் 1617ஆம் ஆண்டுப் பதிப்பில் இருப்பதாக விக்கிபீடியா சொல்கிறது. நாவலை எழுதியவர் ‘லான்லிங் ஷியாவோஷியாவோ ஷெங்’ (Lanling Xiaoxiao Sheng) என்ற புனைபெயரைக் கொண்ட யாரோ ஒருவர். சீனாவின் நான்கு மகத்தான நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது ‘ஜின் பிங் மெய்’. ஆங்கிலத்தில் [...]
Cities of the World
April 29th, 2009
எனக்குப் பிடித்த பதிப்பகங்களில் ஒன்றான Taschenஇன் Cities of the World என்ற புத்தகத்திலிருந்து. 1572-1617 ஆண்டுகளுக்கிடையே வரைபடவியலாளர் Franz Hogenberg வரைந்த செதுக்கோவியங்கள் இவை. ஹோகன்பர்கும் பதிப்பாளர் George Braunஉம் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்த நகரங்களைக் கண்டு அவற்றின் அமைப்பையும் காட்சிகளையும் ஏராளமான ஓவியங்கள், வரைபடங்கள் போன்றவற்றில் பதிவுசெய்து Civitates என்ற புத்தகத்தைப் பதிப்பித்தார்கள். அவற்றை Stephan Füssel, Rem Koolhaas என்று இரண்டு அறிஞர்கள் தொகுத்திருக்கிறார்கள். பிரமிப்பூட்டும் [...]


