யுக்ரெய்னிய நாட்டுப்புறக் கதை
October 6th, 2009
இந்தப் படங்கள் The Lame Duckling என்ற சிறுவர் நூலுக்காக Valentina Melnichenko வரைந்தவை. யுக்ரெய்னிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் John Weir. வெளியீடு: Dnipro Publishers, Kiev, 1982 (யுக்ரெய்னில் இருக்கும் பெரிய ஆறு ஒன்றின் பெயர் Dnipro என்ற Dnieper (நீப்பர்)). NCBH ரேஞ்சுக்கு இல்லை என்றாலும் அழகான புத்தகம். நீண்ட இடைவெளிக்கு மன்னிப்பீர். இம்மாதிரி இடைவெளிகளைத் தவிர்க்க முடியாது போலிருக்கிறது.
சுவரொட்டிகள், ஓவியங்கள், அட்டைகள்…
August 31st, 2009
William Hardy எழுதிய A Guide to Art Nouveau Style என்ற புத்தகத்தின் ருஷ்ய மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்த படங்கள். முதல் பதிப்பு (ஆங்கிலம்) Quintet Publishing Limited, 1986. இந்த ருஷ்யப் பதிப்பு 1999இல் வந்தது போல் தெரிகிறது. 1890-1905 காலகட்டத்தில் உலகைக் கலக்கிய கலை இயக்கம்/பாணி ‘ஆர் நூவோ’ (பிரெஞ்சில் ‘புதுக் கலை’). Mucha என்று கையொப்பமிட்ட படங்களைப் பாருங்கள். இவற்றை உருவாக்கிய Alfons Mucha என்ற ஷெக் கலைஞர்தான் இந்த இயக்கத்தின் பிறப்பிடம். [...]
Flowers of Evil
August 30th, 2009
19ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர் ஷார்ல் போதலேரின் (Charles Baudelaire) கவிதைத் தொகுப்பிற்கான ஆங்கில மொழிபெயர்ப்பான Flowers of Evilக்கு Jeff Hill வரைந்த ஓவியங்கள். மொழிபெயர்ப்பு Jacques Leclercq. வெளியீடு: Peter Pauper Press, நியூயார்க், 1958. ஓவியர் பற்றி விவரங்கள் கிடைக்கவில்லை.


