பார்க்க, படிக்க…
August 25th, 2009
Blackie’s New Systematic English Readers வரிசையில் இரண்டாம் புத்தகம் இந்த Second Reader. குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள் அடங்கிய பாடநூல் (நான்-டீடெய்ல் வகையறா). வெளியீடு: Blackie and Son Limited, லண்டன். இணையத்தில் காணப்படும் தகவல்களின்படி 1913-1924 இடையே வெளிவந்திருக்கிறது. அலங்காரங்களின் பாணியும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவைதான்.
இந்தப் புத்தகத்தில் A.E. Jackson, H.R. Millar, T. Harrison, Frank Adams, A.A. Dixon உட்படப் பல பெரியோர் செதுக்கோவியங்களும் கோட்டோவியங்களும் வரைந்திருக்கிறார்கள்.
பிளாக்கீஸ் பாடநூல்கள் இன்னும் இரண்டு [...]
கடைக்குப் போகலாம் கைவீசு
June 30th, 2009
On Market Street என்ற இந்த புத்தகத்திலிருந்து. மேலே இருப்பது அட்டைப்படம். Arnold Lobel எழுதிய இந்தப் புத்தகத்திற்குப் படங்களை வரைந்தவர் அவரது மனைவியும் புகழ்பெற்ற ஓவியருமான Anita Lobel. 1981இல் Harper Collins வெளியிட்டது. ஏபிசிடி சொல்லித் தரும் புத்தகம் மிகப் பிரபலமாக இருப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு…
‘ஆன் மார்க்கெட் ஸ்ட்ரீட்’ வெளிவந்த ஆண்டில் கால்டெகாட் பதக்க கௌரவம் உட்படப் பல விருதுகளையும் பெற்றது. அதே ஆண்டு ஆர்னால்ட் லோபலின் Fables என்ற புத்தகத்திற்கு கால்டெகாட் பதக்கம் [...]
தொப்பி தின்னும் கழுதை
April 24th, 2009
லூசெட் லாஃபிட் (Lucette Lafitte) எழுதிய La Ferme du Père Mathieu என்ற சிறுவர் நூலுக்கு வால்டர் கட்ஸ் (Walter Goetz) வரைந்த கோட்டோவியங்கள். இது 1964இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்ட பாடநூல். முதல் பதிப்பு 1958.
* * *
* * *
* * *
* * *
* * *
வால்டர் கட்ஸ் பெரிய கார்ட்டூனிஸ்ட். 1911இல் ஜெர்மனியில் பிறந்து 1930இல் இங்கிலாந்தில் பிரஜை ஆனார். 1995இல் இறந்தார். The Independentஇல் வந்த அவருக்கான [...]


