ஒழிந்தான் ஸ்பைடர்மேன்
July 15th, 2009
1963இல் தொடங்கி Marvel வெளியிட்ட The Amazing Spider-Man காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைகள் சில. Death Without Warning, “Spider-Man No More!” ஆகியவற்றை John Romita Senior வரைந்திருப்பது தெரிகிறது. மற்ற அட்டைகளையும் அவர்தான் வரைந்தாரா அல்லது வேறு யாராவதா என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சி தேவை. Sincere thanks to: riptheskull
விவேக போதினி
May 30th, 2009
1908 வாக்கில் தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிகையின் ஆண்டு மலருக்கு/இதழ் தொகுப்புக்கு/சிறப்பிதழுக்கு 1916இல் வந்த விளம்பரம். மேற்கத்திய பாணி அலங்கார வடிவமைப்பு. இந்த இதழ் வந்த சமயத்தில் மேற்கத்தியர்கள் இந்த மாதிரி வடிவமைப்பை நிறுத்திவிட்டார்கள் அல்லது நிறுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். வர்ணாசிரமத்தைப் போற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது. பயங்கரமான பார்ப்பனீயப் பத்திரிகை. The Hindu, சுதேசமித்திரன், வைசியமித்திரன் ஆகிய பத்திரிகைகளின் பாராட்டுரைகளுடன் கூடியது. முழு இதழும் இங்கு கிடைக்கிறது. நன்றி: நாள் ஒரு நூல்
சிவகாமியின் சபதம்
May 28th, 2009
கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ 1944இல் கல்கி பத்திரிகையில் தொடராக வந்தது. நாவலுக்கு வர்மா வரைந்த ஓவியங்கள் இவை (எல்லாம் முதல் பாகத்திலிருந்து). ஒரு சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் வர்மாவை உலகின் மிகப் பெரிய illustratorகளில் ஒருவர் என்று சொல்லலாம். பொன்னியின் செல்வனுக்குப் படம் வரைந்த இன்னொரு மாபெரும் ஓவியர் மணியம் கூட ஒரு அத்தியாயத்திற்கு சில கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார். இந்தத் தொடர்கதை பைண்டிங் புத்தகம் உடையா நிலையில் இருந்திருந்தால் இன்னும் பல படங்களை ஸ்கேன் செய்திருக்கலாம்.


