Archive for the ‘தமிழ்’ Category

 

வளர்ந்த கதைகள் – பகுதி 1

November 18th, 2009

லயன் காமிக்ஸுக்கு மரியாதை செய்வது போல் ஒரு பதிவு இது. 90கள், 2000களில் வந்த லயன், முத்து காமிக்ஸ் அட்டைகள் இவை. என்னிடம் ராணி காமிக்ஸும் 40 காசுக்கு விற்கப்பட்ட 16 பக்க மாயாஜால காமிக்ஸ் புத்தகங்களும் இருந்திருந்தால் அவையும் இங்கு இடம்பெற்றிருக்கும்.

மேலிருப்பதன் பின்னட்டை…

அடுத்த பகுதியில் கௌபாய் அல்லாத க்ரைம், துப்பறியும், சாகசக் கதைகள்.

Read full article | 8 Comments »

எரிப் பறவை

November 14th, 2009

நீண்ட காலத்திற்குப் பிறகு வணக்கம்! இருக்கும் ஒரே புத்தக அலமாரியில் அத்தனை புத்தகங்களையும் அடைத்துவைத்திருப்பதால் உள்ளே என்னென்ன இருக்கிறது என்றே தெரியாத அவல நிலையில் இருக்கிறேன். இதுதான் காணாமல் போனதற்கு சாக்கு. மேட்டருக்கு வருவோம்.

“எரிப் பறவை” என்ற இந்த பெரிய சைஸ் கெட்டி அட்டை புத்தகம் ஐந்து ருஷ்ய நாட்டுப்புறக் கதைகள் அடங்கிய தொகுப்பு. 84 பக்கங்கள். எழுதியவர் செனியா யெர்ஷோவா. படங்கள் Egor Yershov. உறவினர்களாக இருக்கலாம். படங்களை இருவருமே கூட வரைந்திருக்கலாம். வெளியீடு ராதுகா [...]

Read full article | 6 Comments »

தங்கமான எங்கள் ஊர்

August 19th, 2009

முஸ்தாய் கரீம் (Mustai Karim) எழுதிய ‘தங்கமான எங்கள் ஊர்’ என்ற சிறுவர் நாவலுக்கு N. Abakumov வரைந்த சித்திரங்கள். ருஷ்ய மொழியிலிருந்து தமிழாக்கம்: பூ. சோமசுந்தரம். வெளியீடு: முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1981 (முதல் ருஷ்யப் பதிப்பு 1964). ‘ந. அபகூமவ்’ பற்றி வேறு விவரங்கள் தெரியவில்லை. ஆங்கிலத்தில் Golden Eagle Village என்ற தலைப்பில் வந்திருக்கிறது.

Read full article | 5 Comments »