சுவரொட்டிகள், ஓவியங்கள், அட்டைகள்…
August 31st, 2009
William Hardy எழுதிய A Guide to Art Nouveau Style என்ற புத்தகத்தின் ருஷ்ய மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்த படங்கள். முதல் பதிப்பு (ஆங்கிலம்) Quintet Publishing Limited, 1986. இந்த ருஷ்யப் பதிப்பு 1999இல் வந்தது போல் தெரிகிறது. 1890-1905 காலகட்டத்தில் உலகைக் கலக்கிய கலை இயக்கம்/பாணி ‘ஆர் நூவோ’ (பிரெஞ்சில் ‘புதுக் கலை’). Mucha என்று கையொப்பமிட்ட படங்களைப் பாருங்கள். இவற்றை உருவாக்கிய Alfons Mucha என்ற ஷெக் கலைஞர்தான் இந்த இயக்கத்தின் பிறப்பிடம். [...]
இத்தாலிய சுற்றுலா சுவரொட்டிகள்
July 3rd, 2009
எல்லாம் 1920 வாக்கில் வந்தவை. இத்தாலிய சுற்றுலாத் துறைக்காக உருவாக்கப்பட்டவை. வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Grafia S.A.I.I.G. வண்ண அச்சோவியம். உருவாக்கியவர்: Vittorio Grassi, Grafia. வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Allessandro Pomi, Studio Editoriale Turistico வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Richter & C. வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Barabino e Graeve வண்ண அச்சோவியம். உருவாக்கம்: Vittorio Grassi விட்டோரியோ கிராஸ்ஸி, அலெஸ்ஸாண்ட்ரோ போமி ஆகியவை மட்டும் ஓவியர்களின் பெயர்கள். அனைத்தும் Library of [...]
“புத்தகங்களைத் தீயால் கொல்ல முடியாது”
April 27th, 2009
1933இல் ஜெர்மனியில் நாஜிகள் தங்கள் சித்தாந்தத்திற்கு ஒத்துவராத புத்தகங்களை எரித்தார்கள். அதை எதிர்த்து அமெரிக்க அரசின் அச்சுத் துறை வெளியிட்ட சுவரொட்டிகளில் ஒன்று இது. 1942இல் வந்தது. வரைந்தவர் S. Broder. இவரைப் பற்றி விவரங்கள் கிடைக்கவில்லை. சுவரொட்டியில் இருக்கும் சொற்கள் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் உதிர்த்தவை. நன்றி: Library of Congress


