ஷார்ல் பெரோவின் மாயாஜாலக் கதைகள்
September 7th, 2009
‘தேவதைக் கதை’ எழுத்தாளர்களுக்கு முன்னோடியான 18ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு எழுத்தாளர் Charles Perraultவின் தேர்ந்தெடுத்த கதைத் தொகுப்பில் உள்ள படங்கள். இது 1957இல் Geoffret Brereton மொழிபெயர்ப்பில் வந்த பெங்குவின் க்ளாசிக்ஸ் (முதல்) பதிப்பு. இந்த செதுக்கோவியங்களை உருவாக்கியவர் பெயர் புத்தகத்தில் இல்லை. குறைந்தது 200 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கும்.
சுவரொட்டிகள், ஓவியங்கள், அட்டைகள்…
August 31st, 2009
William Hardy எழுதிய A Guide to Art Nouveau Style என்ற புத்தகத்தின் ருஷ்ய மொழிபெயர்ப்பிலிருந்து எடுத்த படங்கள். முதல் பதிப்பு (ஆங்கிலம்) Quintet Publishing Limited, 1986. இந்த ருஷ்யப் பதிப்பு 1999இல் வந்தது போல் தெரிகிறது.
1890-1905 காலகட்டத்தில் உலகைக் கலக்கிய கலை இயக்கம்/பாணி ‘ஆர் நூவோ’ (பிரெஞ்சில் ‘புதுக் கலை’). Mucha என்று கையொப்பமிட்ட படங்களைப் பாருங்கள். இவற்றை உருவாக்கிய Alfons Mucha என்ற ஷெக் கலைஞர்தான் இந்த இயக்கத்தின் பிறப்பிடம்.
விக்கிபீடியாவில் மேலும் [...]
பார்க்க, படிக்க…
August 25th, 2009
Blackie’s New Systematic English Readers வரிசையில் இரண்டாம் புத்தகம் இந்த Second Reader. குழந்தைகளுக்கான கதைகள், கவிதைகள் அடங்கிய பாடநூல் (நான்-டீடெய்ல் வகையறா). வெளியீடு: Blackie and Son Limited, லண்டன். இணையத்தில் காணப்படும் தகவல்களின்படி 1913-1924 இடையே வெளிவந்திருக்கிறது. அலங்காரங்களின் பாணியும் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவைதான்.
இந்தப் புத்தகத்தில் A.E. Jackson, H.R. Millar, T. Harrison, Frank Adams, A.A. Dixon உட்படப் பல பெரியோர் செதுக்கோவியங்களும் கோட்டோவியங்களும் வரைந்திருக்கிறார்கள்.
பிளாக்கீஸ் பாடநூல்கள் இன்னும் இரண்டு [...]


