அந்தக் காலத்து அ-நகைச்சுவை
June 22nd, 2010
வணக்கம். எப்போதோ ஸ்கேன் செய்துவைத்த விகடன் அட்டைப்படம் ஒன்று கணினி அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது. அரிய வாய்ப்பை நழுவ விடாமல் படத்தை இங்கு ஏற்றுகிறேன். “இந்தப் பொடி போடற பழக்கத்தை எப்பத்தான் விட்டுத் தொலைக்கப் போறேளோ …?” ஆனந்த விகடன் 10-06-1956 இதழின் அட்டைப்படம் இது. வரைந்தவர் ராஜு? தாணு? மாலி? கைவசம் இருக்கும் ராஜு, தாணு சித்திரத் தொகுப்புகளில் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் புத்தகங்கள் நெருக்கியடித்துக் கிடக்கும் மர பீரோவில் தேட வேண்டும். [...]
வளர்ந்த கதைகள் – பகுதி 1
November 18th, 2009
லயன் காமிக்ஸுக்கு மரியாதை செய்வது போல் ஒரு பதிவு இது. 90கள், 2000களில் வந்த லயன், முத்து காமிக்ஸ் அட்டைகள் இவை. என்னிடம் ராணி காமிக்ஸும் 40 காசுக்கு விற்கப்பட்ட 16 பக்க மாயாஜால காமிக்ஸ் புத்தகங்களும் இருந்திருந்தால் அவையும் இங்கு இடம்பெற்றிருக்கும். மேலிருப்பதன் பின்னட்டை… அடுத்த பகுதியில் கௌபாய் அல்லாத க்ரைம், துப்பறியும், சாகசக் கதைகள்.
எரிப் பறவை
November 14th, 2009
நீண்ட காலத்திற்குப் பிறகு வணக்கம்! இருக்கும் ஒரே புத்தக அலமாரியில் அத்தனை புத்தகங்களையும் அடைத்துவைத்திருப்பதால் உள்ளே என்னென்ன இருக்கிறது என்றே தெரியாத அவல நிலையில் இருக்கிறேன். இதுதான் காணாமல் போனதற்கு சாக்கு. மேட்டருக்கு வருவோம். “எரிப் பறவை” என்ற இந்த பெரிய சைஸ் கெட்டி அட்டை புத்தகம் ஐந்து ருஷ்ய நாட்டுப்புறக் கதைகள் அடங்கிய தொகுப்பு. 84 பக்கங்கள். எழுதியவர் செனியா யெர்ஷோவா. படங்கள் Egor Yershov. உறவினர்களாக இருக்கலாம். படங்களை இருவருமே கூட வரைந்திருக்கலாம். வெளியீடு [...]


