பெரிய புராணக் காட்சிகள்

‘International Society for the Investigation of Ancient Civilizations’ என்ற இண்டியானா ஜோன்ஸியப் பெயரைக் கொண்ட ஒரு பதிப்பகத்தால் 1993இல் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. 247 பக்கங்கள். ஒவ்வொரு பெரிய புராணக் கதையும் ஓரிரு பக்கங்களில், செய்யுள்களின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் இடம்பெற்றுள்ளது.

நமக்கு முக்கியமாக, 63 நாயன்மார் கதைகளுக்கும் முதுபெரும் ஓவியர் எஸ். ராஜம் ஓவியங்களையும் ஐந்தாறு படங்களில் கதையைச் சொல்லும் கோட்டோவியங்களையும் வரைந்திருக்கிறார் (ஒவ்வொரு ஓவியத்திலும் அடியில் எண்கூட எழுதியிருக்கிறார்). இவை அழகானவை, ஆனால் தத்ரூபமானவை அல்ல. பல ஓவியங்களில் மனிதர்களின் ஒரு கால் படு குச்சியாக இருக்கிறது. நெருப்பு, ரத்தம் போன்ற உணர்ச்சிகரமான பாடுபொருள்கள் அலட்டல் இல்லாமல் வரையப்பட்டுள்ளன. இந்தத் தத்ரூபக் கேட்டை நாம் ‘அப்படியே’ எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இவை பழைய ஓவிய மரபுப்படி வரையப்பட்டவை. பல படங்களில் மணியமும் வர்மாவும் நினைவுக்கு வருகிறார்கள்.

கதை சொல்லல், மொழிபெயர்ப்பு டாக்டர் பிரேமா நந்தகுமார். இந்தப் புத்தகம் பதிப்பாளரான டாக்டர். நா. மகாலிங்கத்தால் யாருக்கோ “சிறந்த பாராட்டுரைகளுடன்” அளிக்கப்பட்டது என்பது சிறப்புத் தகவல். நாயன்மார் பெயர்களுக்கு உசாத்துணை: விக்கிபீடியா பக்கம்.

திருநீலகண்டர்:

இந்தக் கதைக்கான மாதிரி கோட்டோவியப் பக்கம்

இளையான்குடி மாறர்:

மெய்ப்பொருளார்:

கண்ணப்பர்:

மானக்கஞ்சாறர்:

ருத்திர பசுபதியார்:

காரைக்கால் அம்மையார்:2 responses to “பெரிய புராணக் காட்சிகள்”

  1. இந்த ஆண்டு சென்னை புத்தக சந்தையில் சித்திர பெரியபுராணம் என்று தமிழில் வெளியானதே?

  2. இந்த புத்தகம் பற்றிய ஒரு நியூஸ் பதிவு – Comic Cuts 48 – சித்திர பெரியபுராணம்