மாண்புமிகு மிட்செல் ஹுக்ஸ்

இணைய மேய்ச்சலில் சமீபத்தில் கண்டுபிடித்த இன்னொரு ஓவியர் மிட்செல் ஹுக்ஸ் (Mitchell Hooks) (1923-2013). பத்திரிகைகளுக்கும் பேப்பர்பேக் புத்தகங்களுக்கும் ஓவியம் வரைந்து தள்ளிய மூத்த அமெரிக்க ஓவியர்.

இவருடைய ஓவியங்களில் ஒன்றையாவது நாம் அகஸ்துமாஸ்த்தாகப் பார்த்திருப்போம். ஏனென்றால் Avon, Bantam Books, Dell Books, Fawcett உள்ளிட்ட பதிப்பகங்களின் ஏராளமான பேப்பர்பேக் புத்தகங்களுக்கு மிட்செல் ஹுக்ஸ் அட்டை ஓவியம் வரைந்திருக்கிறார். ஆனால் இவரது திறமை, வண்ணப் பயன்பாடு தனித்துத் தெரிவது ‘ரீடர்ஸ் டைஜஸ்ட் கண்டென்ஸ்டு புக்ஸ்’ வரிசைக்காக இவர் வரைந்த ஓவியங்களில். பல பெரிய ஹாலிவுட் படங்களுக்கும் சுவரொட்டிகள் வரைந்திருக்கிறார்.

இந்தப் படங்கள் Leif Peng என்ற அன்பரின் அனுமதியுடன் அவரது தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. அன்னார் வாழ்க. அவரது வலைப்பதிவு: Today’s Inspiration. ஓவியங்கள் இடம்பெற்ற விவரங்களைப் பார்க்கவும் பெரிய அளவில் பார்க்கவும் படங்களை தலா ஒருமுறை சொடுக்கவும்.2 responses to “மாண்புமிகு மிட்செல் ஹுக்ஸ்”

  1. முதல் இரண்டு படங்கள் டிபிக்கல் ஹாலிவுட் பட போஸ்டர்களை நினைவுபடுத்தினாலும் மூன்றாவது படம் அட்டகாசம்

    குறிப்பாக அந்த ஓவியம் வரையப்பட்ட கோணத்தை நமக்கு எளிமையாக புரிய வைத்து விட்டார்.

    விக்கியாண்டவர் துணையுடன் இவர்தான் முதல் ஜேம்ஸ் பான்ட் பட போஸ்டரை செய்தவர் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.