ஒரு சிப்பாய்க்கு வந்த சோதனை

அமெரிக்க எழுத்தாளர் Kevin Baker எழுதி க்ரொயேஷிய காமிக் கலைஞர், ஓவியர் Danijel Zezelj வரைந்த கிராஃபிக் நாவல் Luna Park (2009). வெளியீடு Vertigo. 160 பக்கங்கள்.

செச்னியக் கலகக்காரர்களுக்கு எதிராகப் போராடிவிட்டுப் பல இழப்புகளுக்குப் பின்பு அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து அடியாளாகப் பிழைப்பு நடத்தும் ஒரு முன்னாள் ருஷ்ய சிப்பாயின் கதை ‘லூனா பார்க்’. செச்னியப் போர், புரூக்ளின் நிழல் உலகம், பண்டைய ருஷ்ய வரலாறு என்று கதை கொஞ்சம் குழப்பவே செய்கிறது. வளவள என்று வர்ணனை. பரவலான பாராட்டைப் பெற்றிருப்பதால் இன்னொரு முறை வாசிக்கவிருக்கிறேன். ஆனால் ஓவியங்கள் கண்ணில் ஒற்றிக்கொள்ளத் தக்கவை. ஒரு ஓவியருக்கே உரிய செறிவான பாணியில் இந்த நாவலை ஜெஜெலி உருவாக்கியிருக்கிறார்.  வண்ணங்களும் textureகளும் இதை ஒரு ஓவியப் புத்தகமாகவே கருதவைக்கின்றன.

ஜெஜெலி பெரிய ஆள் போல. 1993இல் இத்தாலிய மொழியில் வெளிவந்த இவருடைய முதல் கிராஃபிக் நாவலுக்கு ஃபெடரிக்கோ ஃபெல்லினி அறிமுகம் எழுதியிருக்கிறார். ஜெஜெலி டஜன் கணக்கில் கிராஃபிக் நாவல்களும் காமிக்ஸும் படைத்திருக்கிறார். பட்டியலுக்கு அவரது வலைத்தளத்தை அணுகுவீர். புத்தகம் ஃப்ளிப்கார்ட்டில் ஆயிரம் ரூபாய்க்கு மேலும் கீழுமான விலைகளில் கிடைக்கிறது.Comments are closed.