ஆனந்த விகடன் 1964 தீபாவளி மலர் – பகுதி 2

கி.வா. ஜகன்னாதனின் “மூன்று ரூபாய்” சிறுகதைக்காக வாணி வரைந்த இரு ஓவியங்கள்…

சும்மா தீபாவளி மலர் தன்மைக்காக வழவழ தாளில் ஓர் ஓவியம். வரைந்தவர் எஸ். பாலு.

“க்ஷேத்ராடனம்: சங்கர நயினார் கோவில்” என்ற கட்டுரைக்காக ஸாகர் வரைந்த ஓவியம்.

பின்னுகிறார்கள்!

பட்டாசு விளம்பரம். V.K. Baraskar என்று கையொப்பமிடப்பட்டிருக்கிறது. கூகுள் செய்து பார்த்தால் பெரிய ஆள், இந்த மாதிரி நிறைய வரைந்திருக்கிறார்.

ஸாரதியின் ஓவியத்தில் நாயகிக்கு ஓட்டலைத் தத்ரூபமாக விவரிக்கிறார் நாயகர்.

மர்ஃபி ரேடியோவும் மறக்க முடியாத மர்ஃபி குழந்தையும்.

‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடிகையாக மனோரமா பெருக்கும் காட்சி நினைவுக்கு வருகிறது.

60களில் மிக முக்கியமான விளம்பரம் இது (தமாசு).

பைண்டிங் ஒத்துழைத்திருந்தால் இன்னும் பல நல்ல ஓவியங்களையும் விளம்பரங்களையும் ஸ்கேன் செய்திருக்கலாம். பிராப்தம் இல்லை.

பிற்சேர்க்கை: FACT விளம்பர ஓவியத்தைப் பற்றி அருள் செல்வனின் இடுகை: பழைய விளம்பரம். என்றுமான அழகியல்.5 responses to “ஆனந்த விகடன் 1964 தீபாவளி மலர் – பகுதி 2”

 1. உங்கள் கைவண்ணத்தில் இந்த புத்தகத்தினை ரசிக்க முடிந்தது

  நன்றி.

  மர்ஃபி ரேடியோ விளம்பரங்கள் சிறப்பு (சமீபத்தில் பர்ஃபி படத்தில் இந்த விளம்பரங்களை கேட்டது நினைவுக்கு வருகிறது).

  சாகரின் ஓவியங்களை இதுவரையில் நான் கண்டதில்லை. அருமையாக வரைந்து இருக்கிறார்.

  கல்கி, ஆனந்த விகடனில் கோவில், புண்ணிய ஸ்தலங்களை வரைபவர்களுக்கு ஓவியர் சிற்பியின் ஸ்டைல் தானாகவே வந்துவிடுமோ?

 2. நன்றி விஸ்வா. ஸாகர், சாகர் என்று இரண்டு பேர் இருந்தார்கள் போலிருக்கிறது. பின்னவரும் பரவாயில்லை.

  சில்பியின் ஓவியங்களும் இந்த மலரில் இருந்தன, ஆனால் பைண்டிங் பிரச்சினை பண்ணியது. 🙁

 3. //ஆனால் பைண்டிங் பிரச்சினை பண்ணியது. //

  சமீபத்தில் ஆர்வக் கோளாறில் ஒரு பைண்டிங் புத்தகத்தினை பிரித்து ஸ்கான் செய்து விட்டேன். இப்போது அந்த புத்தகத்தினை பராமரிப்பது சிரமமாக இருக்கிறது.

 4. ஸ்கேன் செய்வதற்காகப் புத்தகத்தை சேதப்படுத்தக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருக்கிறேன். அதையும் மீறி சில புத்தகங்களால் வேலைப் பளுவைத் தாங்க முடிவதில்லை. 🙁

 5. //ஸ்கேன் செய்வதற்காகப் புத்தகத்தை சேதப்படுத்தக்கூடாது என்பதில் வைராக்கியமாக இருக்கிறேன்.//

  இந்த மன உறுதியை ஆண்டவன் எனக்கு அளிக்க வேண்டுகிறேன்