முதல் காதல்

Craig Thompsonஇன் Blankets கிராஃபிக் நாவலில் மைல்கல்லாகக் கருதப்படுகிறது. கார்ட்டூன்தனமான கோடுகளில் சீரியசான கதை சொல்லி பனிக்காலக் காட்சிகள், எண்ண ஓட்டங்களைப் படிமங்களுடன் காட்சிப்படுத்துதல் என்று ஒரு தனி உலகை உருவாக்கிவிடுகிறார் தாம்சன். காட்சிப்படுத்துதலில் ஆச்சரியமூட்டும் புதுமைகளைச் செய்திருக்கிறார். இது ஒரு ‘கமிங் ஆஃப் ஏஜ்’ கதை. படிக்காதோர் அவசியம் பார்க்க/படிக்க வேண்டிய நாவல் இது. குறிப்பாக உங்களுக்குக் காதல் கதைகள் பிடிக்குமென்றால் தவற விடாதீர்கள்.

வழக்கமான காமிக்ஸ் வாசகனான எனக்கு அவருடைய கார்ட்டூன் பாணி முதலில் எரிச்சல் அளித்தாலும் போகப் போக அதன் அருமை புரியத் தொடங்கியது. நான் நிறைய விலை கொடுத்து வாங்கிய மிகச் சில புத்தகங்களில் ஒன்று இது. பிரம்மாண்டமான புத்தகம். நான் வாங்கியபோது சாதா அட்டை வடிவம் ரூ. 1100 சொச்சம். இப்போது அதிகம்.

வெளியீடு Top Shelf Productions; வெளிவந்த ஆண்டு 2003; 592 பக்கங்கள். ‘பிளாங்க்கெட்ஸ்’ பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. க்ரெயிக் தாம்சன் Carnet de Voyage, Habibi, Good-bye Chunky Rice என இன்னும் மூன்று கிராஃபிக் நாவல்களையும் பல சிறிய காமிக் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். மேலதிக விவரங்களுக்கு விக்கிபீடியா.

This entry was posted on Tuesday, February 28th, 2012 at 11:19 am and is filed under 2000கள், அட்டைப்படம், கருப்பு-வெள்ளை, காமிக்ஸ், பிற மொழி, புத்தகம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. Both comments and pings are currently closed.

2 Responses to “முதல் காதல்”

  1. King Viswa Says:

    பல ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவரின் வீட்டில் இந்த நாவலை பார்த்தேன். அவர் இதனைப்பற்றி சிலாகித்து கூற, சில பக்கங்களை புரட்டி பார்த்தேன். ஓவியங்கள் சுவாரஸ்யப்படாததால் அப்படியே விட்டு விட்டேன். நீங்கள் கூறுவதைப்பார்த்தால் தவறான முடிவு எடுத்துவிட்டேனோ என்று தோன்றுகிறது.

  2. சாத்தான் Says:

    எனக்கு காமிக்ஸ் என்றால் லயன், முத்து மாதிரி இருக்க வேண்டும். நகைச்சுவை என்றால் லக்கிலூக், ஆஸ்டரிக்ஸ் மாதிரி. அதனால்தான் முதலில் பிளாங்க்கெட்ஸின் ஓவியங்களை ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் அந்த பாணி justified என்று இப்போது நினைக்கிறேன். கண்டிப்பாகப் படியுங்கள்.