வளர்ந்த கதைகள் – பகுதி 1
லயன் காமிக்ஸுக்கு மரியாதை செய்வது போல் ஒரு பதிவு இது. 90கள், 2000களில் வந்த லயன், முத்து காமிக்ஸ் அட்டைகள் இவை. என்னிடம் ராணி காமிக்ஸும் 40 காசுக்கு விற்கப்பட்ட 16 பக்க மாயாஜால காமிக்ஸ் புத்தகங்களும் இருந்திருந்தால் அவையும் இங்கு இடம்பெற்றிருக்கும்.


மேலிருப்பதன் பின்னட்டை…












அடுத்த பகுதியில் கௌபாய் அல்லாத க்ரைம், துப்பறியும், சாகசக் கதைகள்.



November 18th, 2009 at 8:31 pm
சூப்பருங்க..என் சின்ன வயசு ஞாபகம்லாம் வருது
லயன் காமிக்ஸ், அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர், கோகுலம் = ஹும்..அது ஒரு அழகிய நிலா காலம்..கனவிலும் தினம் தினம் ஒலா போகும்
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
November 18th, 2009 at 8:35 pm
நன்றி. இன்னொரு பகுதி இருக்கு.
November 18th, 2009 at 10:28 pm
அருமையான அட்டைபடங்கள். ஒரிஜினல்களை மாதிரியாக கொண்டுதான் நமது ஓவியர்கள் இந்த அட்டைகளை உருவாக்கினார்கள், என்றாலும் அவை வண்ணம் மற்றும் முகஅமைப்பில் பன்மடங்கு மேன்பட்டு இருப்பது உண்மைதான்.
நீங்கள் வழங்கிய எல்லா லயன் இதழ்களும் 90கள் மற்றும் அதற்கு பிறகு வெளியானவை தான். 80களில் லயன் சாதாரண இதழ்கள் 2, அல்ல 3 ரூபாய் வரையில் தானே விற்பனை ஆனது.
அடுத்த தாக்குதலும் லயன் தானா…. பிய்த்து உதறுங்கள்.
November 19th, 2009 at 3:17 pm
நன்றி. யாராவது திருத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன், விலையும் விவரங்களும் நினைவில்லை. சில புத்தகங்கள் மறுவெளியீடு செய்யப்படாமலே காணாமல் போய்விட்டன.
November 23rd, 2009 at 12:49 pm
ஒவ்வொரு பழைய ராணி, லயன், முத்து காமிக்ஸையும் படிக்கும் போது அந்த காலத்தின் நினைவுகள் பசுமையான நெஞ்சில் வந்து போகும் விடயம், செலவே இல்லாமல் கால இயந்திரத்தில் பயணிக்க கிடைக்கும் வாய்ப்பு.
லயன் முத்து ராணி அறிமுகமாகி 20 வருடங்களுக்கும் அதிகம் கழிந்து விட்டது என்று நினைக்கும் போதே, காலம் எவ்வளவு வேகமாக நம் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களை தாண்டி கொண்டிருக்கிறது என்று வியப்பாக இருக்கிறது, நண்பரே.
February 10th, 2010 at 11:20 am
Dear Sir,
I can download and read these comics books in English and other Languages but not in Tamil. Publishers have stopped reprinting these comic books. Can anyone upload the complete version of the comic books, so that we can read them again. Thanks,
February 21st, 2010 at 1:46 am
விக்ரம், தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை முழுசு முழுசாக ஸ்கேன் செய்து போடுவதற்கு நிறைய நேரம் தேவைப்படும். யாருக்கு அவ்வளவு இருக்கிறது?
March 1st, 2010 at 6:49 pm
This is super awesome! Love the art work!