எரிப் பறவை
நீண்ட காலத்திற்குப் பிறகு வணக்கம்! இருக்கும் ஒரே புத்தக அலமாரியில் அத்தனை புத்தகங்களையும் அடைத்துவைத்திருப்பதால் உள்ளே என்னென்ன இருக்கிறது என்றே தெரியாத அவல நிலையில் இருக்கிறேன். இதுதான் காணாமல் போனதற்கு சாக்கு. மேட்டருக்கு வருவோம்.

“எரிப் பறவை” என்ற இந்த பெரிய சைஸ் கெட்டி அட்டை புத்தகம் ஐந்து ருஷ்ய நாட்டுப்புறக் கதைகள் அடங்கிய தொகுப்பு. 84 பக்கங்கள். எழுதியவர் செனியா யெர்ஷோவா. படங்கள் Egor Yershov. உறவினர்களாக இருக்கலாம். படங்களை இருவருமே கூட வரைந்திருக்கலாம். வெளியீடு ராதுகா பதிப்பகம், மாஸ்கோ, 1984. முதல் பக்கம் கிழிக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழுக்கு மொழிபெயர்த்தவர் யாரென்று தெரியவில்லை. இந்த விவரங்கள் The Fire-Bird என்ற ஆங்கிலப் பதிப்பு பற்றி இணையத்தில் தேடியெடுத்த தகவல்களிலிருந்து வருகின்றன. புகழ்பெற்ற ‘அழகி வசிலிசா’வும் இதில் இருக்கிறது.
மாதிரிக்கு ஒரு பக்கம்…

அலங்காரத்துடன்…

இனி படங்கள் மட்டும்.








November 15th, 2009 at 1:21 am
ருஷ்ய மொழி கதைகளுக்கே உண்டான ஓவிய பாணி. அருமையான தேர்வு, நண்பரே.
ஒரு அலமாரியில் புத்தகங்களை முட்ட முட்ட அடுக்கி வைத்து விட்டு, நடுவில் இருக்கும் ஒரு புத்தகத்தை எடுக்க சோம்பல் முறிப்பது எனக்கும் அடிக்கடி நடக்கும் ஒரு வியாதி தான்
November 15th, 2009 at 12:10 pm
நன்றி ரஃபிக்! விரைவில் இன்னொரு அலமாரி வாங்கவிருக்கிறேன். அது வந்தால் இந்தப் பிரச்சினை தீரும். இல்லையென்றால் புத்தகங்கள் சேதமடைந்துவிடும்.
November 15th, 2009 at 8:01 pm
ரஷ்ய குழந்தைகள் இலக்கியத்திற்கு நானும் ரசிகன் தான். என்னிடம் ஏறக்குறைய 20 புத்தகங்கள் தேறும்… வித்தியாசமான சித்திரங்கள்
November 16th, 2009 at 10:48 am
20 என்பது மிகப் பெரிய எண்ணிக்கை! மிகமிக அரிதாகத்தான் சோவியத் தமிழ்ப் புத்தகங்களைப் பார்க்க முடிகிறது. பத்திரமாக வைத்திருங்கள்!
November 22nd, 2009 at 1:07 am
நண்பரே,
நீங்கள் வழங்கியுள்ள சித்திரப்பக்கங்கள் யாவும் அற்புதம். அந்தக் கற்பனை உலகிற்கே என்னை அவை எடுத்துச் சென்று விடும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. நல்லதோர் பதிவு.
November 23rd, 2009 at 10:35 am
நன்றி, கனவுகளின் காதலன்!