கிரிம் சகோதரர்களின் கதைகள்

நாட்டுப்புறக் கதைகளுக்கும் மாயாஜாலக் கதைகளுக்கும் பேர்போன Wilhelm Grimm, Jakob Grimm சகோதரர்களின் கதைகளின் தொகுப்பான Household Storiesக்கு Walter Crane வரைந்த ஓவியங்கள். ஜெர்மனிலிருந்து மொழிபெயர்ப்பு வால்டர் க்ரேனின் சகோதரி Lucy Crane. வெளியீடு: Macmillan & Co., Ltd., லண்டன், 1914.













வால்டர் க்ரேன் (1845-1915) ஏராளமான புத்தகங்களுக்குப் படம் வரைந்து புகழ்பெற்ற ஒரு பிரிட்டிஷ் ஓவிய மேதை. 1864இல் சிறுவர் நூல்களுக்குப் படம் வரையத் தொடங்கிய க்ரேனுக்குப் பல கலை இயக்கங்களில் பரிச்சயம் இருந்தது. சிறுவர் நூல்களுக்கு அவர் பல்வேறு பாணிகளைப் பின்பற்றி வரைந்தார்.
1880களில் தொடங்கி அவர் பல்வேறு கல்வியமைப்புகளில் ஆசிரியர், நிர்வாகி போன்ற பொறுப்புகளை வகித்தார். 1915இல் மரணமடைந்தார். மேலும் விவரங்களுக்கு வழக்கம் போல் விக்கிபீடியா.
இனி வரும் இடுகைகளில் இன்னும் சில மேதைகளின் படைப்புகள் ஏற்றப்படும்.


