ஒழிந்தான் ஸ்பைடர்மேன்

1963இல் தொடங்கி Marvel வெளியிட்ட The Amazing Spider-Man காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைகள் சில. Death Without Warning, “Spider-Man No More!” ஆகியவற்றை John Romita Senior வரைந்திருப்பது தெரிகிறது. மற்ற அட்டைகளையும் அவர்தான் வரைந்தாரா அல்லது வேறு யாராவதா என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சி தேவை.




Sincere thanks to: riptheskull



July 17th, 2009 at 10:55 am
இத்தளத்தில் உள்ள படங்கள் அனைத்தும் நீங்கள் scan செய்து வெளியிடுவன என்றால், அவற்றின் காப்புரிமையை அறியலாமா? பொருத்தமான creative commons உரிமத்தில் கிடைத்தால் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களுக்கு உதவும். நன்றி.
July 17th, 2009 at 12:06 pm
ரவி, இந்த வலைப்பதிவில் உள்ள படங்களில் 99% படங்களுக்கு யாராவது பதிப்புரிமை வைத்திருப்பார்கள். நம்மூரில் கிடைத்த படங்களைப் பொறுத்த வரை அவற்றுக்குத் தமிழ்ப் பத்திரிகைகளிடம் உரிமை இருக்கும். ஆனால் படங்களை லாபநோக்கமில்லாத ஒரு வலையகத்தில் பகிர்ந்துகொள்வதால் வில்லங்கம் பற்றிக் கவலைப்படவில்லை. சைடுபாரில் டிஸ்கியில் ஒரு வாக்கியம் சேர்த்திருப்பதைப் பாருங்கள். உங்களுக்கு ஏதேனும் படம் பயன்படும் என்றால் தயவுசெய்து ட்விட்டரில் சொல்லுங்கள். காப்பிரைட் இல்லாத படங்கள் இங்கே அரிது என்பதால் அது உங்களுக்குப் பெரிய வேலையாக இருக்காது! பல படங்கள் – எ.கா., தஸ்தயெவ்ஸ்கி பற்றியவை – விக்கிமீடியா காமன்ஸிலிருந்து எடுக்கப்பட்டவைதாம்.
July 22nd, 2009 at 9:44 pm
ஜான் ரமிட்டா சீனியர் ஒரு அருமையான ஓவியர், அதுவும் அட்டைபடங்களில் அவர் செய்த ஜாலவித்தைகள் இன்றும் மனதில் தங்கும் ஒரு விடயம். முக்கியமாக ஸ்பைடர்மேன் கதைகளில் அவர் புகுந்து விளையாடுவார்.
இப்போது அவர் பாணியில் ரமிட்டா ஜுனியரும் அமேசிங்க ஸ்பைடர்மேனில் பிய்த்து மேய்ந்து கொண்டிருக்கிறார்…. புலிக்கு பிறந்தது பூனையாகுமா..
அருமையான படங்களை நினைவுகூற வைத்தமைக்கு நன்றி நண்பரே.
July 23rd, 2009 at 12:08 pm
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். மூலப்படத்துக்கான உரிமை வேறு ஒருவரிடம் இருந்தாலும், அந்த படம் அச்சிட்ட பக்கத்தை நாம் scan செய்து போட்டால், இந்த scan செய்த படத்தை நியாயமான பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம் என்று எங்கோ ஒருகாப்புரிமை விதி படித்த நினைவு. அதான் கேட்டேன். உறுதிப்படுத்திக் கொண்டு சொல்கிறேன். நன்றி.
July 24th, 2009 at 10:18 am
ரஃபிக்: உங்களுக்குத் தெரியாத பெயரே இல்லை போலிருக்கிறது.
ரவி: அப்புறம் என்ன பிரச்சினை?
படங்களின் காப்பிரைட் நிலவரம் பார்த்தாலே தெரிந்துவிடும். எ.கா.: திருத்தொண்டர் பெரிய புராணம், பெரிய எழுத்து மயிலிராவணன் கதை போன்ற புத்தகங்களில் இருக்கும் படங்களுக்கு காப்பிரைட் இல்லை. எனவே விக்கிபீடியாவுக்குப் பயன்படுத்துபவர்கள் அவற்றின் காப்பிரைட் நிலவரத்திற்கேற்ப அவற்றைப் பயன்படுத்தலாம். காப்பிரைட் உள்ள படங்களை 750 பிக்சலுக்கு மேற்பட்ட அளவில் யாரும் தங்கள் வலைப்பக்கங்களில் போட்டுக்கொள்ளக் கூடாது என்று ஒரு விதி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
July 24th, 2009 at 3:11 pm
அருமை! அட்டை படங்களை பார்த்தாலே தெரிகின்றது எவளவு அருமையான ஓவியம் என்று.
பதிவுக்கு நன்றி..
July 24th, 2009 at 4:02 pm
வருகைக்கு நன்றி, மிஸ்டர் ஜே!