நரி, பூனை, காக்கை, சேவல்

Alexei Tolstoy தழுவி எழுதிய நாட்டுப்புறக் கதையான Cock Stay-at-Home with the Crimson Comb என்ற சிறுவர் நூலுக்கு Y. Rachev வரைந்த ஓவியங்கள். ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தது Irina Zheleznova. வெளியீடு Malysh Publishers, மாஸ்கோ, 1979. அழகான பெரிய சைஸ் புத்தகம். குழந்தைகள் கொடுத்துவைத்தவர்கள்.



மாலிஷ் பதிப்பகமும் நிறைய சிறுவர் நூல்களை வெளியிட்டிருக்கிறது. பெயரில் மட்டும்தான் வித்தியாசமே தவிர அவை அப்படியே ராதுகா பதிப்பகப் புத்தகங்கள் மாதிரிதான் இருக்கின்றன.
(கடும் பணி, வெளியூர்ப் பயணம், உடல் நலமின்மை ஆகிய மூன்றினால் இந்தப் பக்கம் வர முடியாமல் போய்விட்டது. இனி பிரச்சினை இருக்காது.)



June 28th, 2009 at 12:13 am
தோழர்,
//கடும் பணி, வெளியூர்ப் பயணம், உடல் நலமின்மை ஆகிய மூன்றினால் இந்தப் பக்கம் வர முடியாமல் போய்விட்டது. இனி பிரச்சினை இருக்காது.//
இந்த பதிவிலேயே எனக்கு பிடித்த பகுதி இது தான். வாழ்த்துக்கள், தொடர.
June 28th, 2009 at 1:33 pm
நன்றி, விஸ்வா. முன்பு போல் தினமும் இரண்டு இடுகைகள் போடுமளவுக்கு இப்போது நேரம் இருப்பதில்லை என்றாலும் இந்த வலைப்பதிவை காயப்போடுவதாக இல்லை.
June 30th, 2009 at 11:00 am
அடடா, இந்த ஓவியங்கள் அனைத்தும், நூலகத்தில் ஒரு புத்தகத்தில் பார்த்த நியாபகம் இருக்கிறது. இப்போது தெரிகிறது, ருஷ்ய சிறுவர் இலக்கியங்கள் அந்த காலத்தில் எப்படி நம்மிடையே பிரபலமாக இருந்திருக்கும் என்று…
வாரம் ஒரு இடுகை என்று உங்கள் நேரம் போல இடுங்கள் நண்பரே. முக்கியமானது, நம்முடைய பிரதான வேலைக்கு பங்கம் ஏற்படாமல் செய்ய இயலுமா என்பதே.
இப்படி சித்திரங்களை பார்க்க வேறு எங்கும் வாய்ப்பில்லை என்பதால், காத்திருக்க நான் தயார். படித்து பொருமையாக கருத்திட எனக்கு நேரமும் அதிகம் இருக்கும்.
June 30th, 2009 at 3:38 pm
ஆதரவுக்கு மிக்க நன்றி ரஃபிக்!