தீப்பெட்டி லேபிள்கள்

More images after the jump

தீப்பெட்டி லேபிள்களைப் போல் வண்ணமயமானவையும் கண்ணைக் கவருபவையும் வேறு உண்டோ? சாத்தியமில்லை.

தீப்பெட்டி லேபிள்கள் மினியேச்சர் போஸ்டர்கள் போல. ஜெர்மன் நாட்கெல்டு நோட்டுகளையும் அவை நினைவுபடுத்தலாம். ஒரு ரூபாய் ஸ்டாம்ப் சைஸில் பல விதமான லேஅவுட்களையும் பார்க்கலாம். அவ்வளவு சிறிய இடத்தில் அடர்த்தியான வண்ணப் பின்னணியில் அடர்த்தியான கோடுகளைக் கொண்ட கோட்டோவியங்கள் மட்டுமில்லாமல் ‘முழுநீள’ மல்ட்டிகலர் ஓவியங்களைக் கூட அவற்றில் பார்க்கலாம். அவற்றில் நவீன கால (அரூப டிசைன்கள் போன்றவை) வடிவமைப்பும் உண்டு, பாரம்பரிய வடிவமைப்பும் (எ.கா., அலங்காரங்கள், கோவில்-குளம்) உண்டு.

தீப்பெட்டி லேபிள்களில் இருக்கும் குறும்படைப்புகளில் பலமான கிராமப்புற அல்லது மொபசல் வாசனை அடிக்கிறது. அவற்றின் சிறப்பும் அதுதான். அவற்றில் இடம்பெறும் படங்கள் எல்லாமே பயிற்சிபெற்ற கலைஞர்களால் வரையப்பட்டிருக்க முடியாது. ஆனால் அவற்றில் உள்ள ஒருவித அப்பாவித்தனமும் (naïveté) கற்பனையும் ஈர்க்கின்றன.

சிலவற்றில் நாட்கெல்டு நோட்டுகளுக்கே உரிய லேஅவுட் இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது (கடைசியில் பார்த்தால் இதை நாட்கெல்டு பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்).

தீப்பெட்டி லேபிள்களை சேகரிக்கும் பொழுதுபோக்கு 1960களில்தான் தொடங்கியதாக விக்கிபீடியா சொல்கிறது. இங்கே பத்தாண்டுகள் தாமதமாகத் தொடங்கியிருக்கக்கூடும். மேலை நாடுகளில் அச்சுத் துறையும் கிராஃபிக்ஸ்/வடிவமைப்புத் துறையும் நம்மை விட சில பத்தாண்டுகள் முன்னணியில் இருந்ததால் மேலை நாட்டு தீப்பெட்டி லேபிள்கள் இன்னும் அழகாக, தரமாக இருக்கின்றன. இருந்தாலும் நம்முடைய பாணியும் தனியாகத் தெரியத்தான் செய்கிறது.

எனது பிள்ளைப் பருவத்தில் 80களில் வெளிநாட்டு அஞ்சல் தலைகள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், பழைய இந்திய நாணயங்கள் உட்பட தீப்பெட்டி லேபிள்களையும் சேகரித்திருக்கிறேன். இப்போது 30, 40 சொச்சம் வயதானவர்களுக்கு மட்டும்தான் அந்தப் பொழுதுபோக்கு இருக்கும் போலிருக்கிறது.

This entry was posted on Friday, June 12th, 2009 at 5:14 pm and is filed under 1970கள், 1980கள், அனாமத்து, ஓவியம், கோட்டோவியம், சிறப்புப் பதிவுகள், தமிழ், பெண்கள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 Responses to “தீப்பெட்டி லேபிள்கள்”

  1. dYNo Says:

    அருமை! அருமை!!

    Two cats, Tajmahal, Gorilla, Red fort, unicorn மற்றும் நீங்கள் மேலே கொடுத்துள்ள Lion, cock எல்லாம் தான் எங்கள் அஃபீசியல் கரன்சி! பம்பரம், சோளி, கெத்தை (வீட்டில குண்டி விளையாட தடா) என்று எந்த விளையாட்டு விளையாடினாலும் இதுதான் mode of exchange. ஒவ்வொன்றுக்கும் தனி வேல்யூ! மரப்பட்டையில் செய்த தீப்பெட்டிகளுக்கு குறைந்தமதிப்பும், காகித அட்டைகளில் செய்தவை அதிக மதிப்பும். வீட்டு அட்டாணியில் கட்டுகளை பதுக்கிவைத்ததுமுண்டு!

    நல்ல கலெக்‌ஷன்! பகிர்விற்கு நன்றி!!

  2. "சாத்தான்" Says:

    நன்றி டைனோ!

  3. என். சொக்கன் Says:

    ஆஹா, என்ன ஒரு கலெக்‌ஷன் – எப்படிப் பிடிச்சீங்க குரு? கால் நூற்றாண்டு காலம் பின்னோக்கி இழுத்துட்டுப் போய்ட்டீங்க – கலக்கல்! நன்றி!

  4. Bee'morgan Says:

    வாவ்.. அருமையான தொகுப்பு.. :)

  5. msathia Says:

    சூப்பர்.. கலக்கல… காலங்காத்தால ஒரு நாஸ்டால்ஜியா… அருமை.

  6. "சாத்தான்" Says:

    @சொக்கன்: பாதி என்னிடம் இருப்பவை, பாதி இரவல் வாங்கியவை. நன்றி!

    @Bee’morgan, msathia: நன்றி! இவை இப்போது கூடக் கடைகளில் கிடைப்பதாக மதுரைக்கார நண்பர் ஒருவர் சொல்கிறார். தேவைப்பட்டால் வாங்கிக்கொள்ளலாம்.

  7. ரஃபிக் ராஜா Says:

    அருமையான படங்கள், பழைய நினைவுகளை இழுக்கும் முகாந்திரங்கள். பட்டணத்தில் வாழ்ந்ததால் அனேகமான தீப்பெட்டி பிராண்டுகளை காண முடியவில்லை. மொத்தம் 2,3 தான் அனேக கடைகளில் கிடைக்கும், உதாரணத்துக்கு பிரதான சீத்தா பைட். அதில் அந்த சீதா வேட்டை காட்சியை தவிர ஒன்றை நான் கண்டதாக நியாபகே இல்லை. இங்கே இத்தனை தீபெட்டிகளை வரிசைபடுத்தி இருக்கிறீர்கள். அருமையான கலெக்ஷன்.

    // 30, 40 சொச்சம் வயதானவர்களுக்கு //
    ஆமா, அப்ப நீங்க எந்த பக்கம்.. ஹி ஹி ஹி :)

    காமிக்கியல்

  8. tamilmagan Says:

    வெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவல்.Rs.220

  9. tamilmagan Says:

    நான் எழுதியிருக்கும் வெட்டுப் புலி நாவல் இப்படி ஒரு தீப்பெட்டியின் அட்டைப் படத்தின் சரித்திரத்தை தேடி அலைந்த கதைதான். அதைத்தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்.

  10. ram Says:

    அடேங்கப்பா, இந்த தீப்பேடி லேபிலை கலெக்ட் பன்றதே பெரிய வேலையா வெச்சிருந்த எங்க சின்ன வயசு ஞாபகம் வந்திருச்சி. ரொம்ப பெரிய வேலை செய்திருக்கீங்க. நன்றி.

Leave a Reply