கடைக்குப் போகலாம் கைவீசு

On Market Street என்ற இந்த புத்தகத்திலிருந்து. மேலே இருப்பது அட்டைப்படம். Arnold Lobel எழுதிய இந்தப் புத்தகத்திற்குப் படங்களை வரைந்தவர் அவரது மனைவியும் புகழ்பெற்ற ஓவியருமான Anita Lobel. 1981இல் Harper Collins வெளியிட்டது. ஏபிசிடி சொல்லித் தரும் புத்தகம் மிகப் பிரபலமாக இருப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு…

‘ஆன் மார்க்கெட் ஸ்ட்ரீட்’ வெளிவந்த ஆண்டில் கால்டெகாட் பதக்க கௌரவம் உட்படப் பல விருதுகளையும் பெற்றது. அதே ஆண்டு ஆர்னால்ட் லோபலின் Fables என்ற புத்தகத்திற்கு கால்டெகாட் பதக்கம் கிடைத்தது. இது அமெரிக்காவில் சிறந்த சிறுவர் நூல்களுக்குப் படம் வரைந்த ஓவியர்களுக்குத் தரப்படும் மிக உயர்ந்த விருது.

சிறுவர் நூல்களுக்கு வரையும் ஓவியர்களில் அனிட்டா லோபலுக்கு முக்கியமான இடம் உண்டு. இவர் போலந்தில் 1934இல் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நாஜிகள் அனிட்டாவையும் அவரது சகோதரரையும் சிறைபிடித்து வதை முகாமுக்கு அனுப்பினார்கள். 1945இல் ஸ்வீடிஷ் செஞ்சிலுவைச் சங்கம் அவர்களை மீட்டது.

1952இல் அவர் குடும்பத்தோடு நியூயார்க்கிற்குக் குடிபெயர்ந்தார். நாடகத்திலும் ஆர்வம் கொண்டிருந்த அனிட்டாவுக்கு ஆர்னால்டு லோபல் இயக்கிய ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1955இல் இருவரும் மணம் செய்துகொண்டார்கள். கணவர் எழுதிய நான்கு புத்தகங்களுக்கு அவர் படங்கள் வரைந்தார்.

அனிட்டா தானும் மற்றவர்களும் எழுதிய ஐம்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களுக்குப் படம் வரைந்திருக்கிறார். அவற்றில் மிகப் பிரபலமானவை ‘On Market Street’, ‘Potatoes, Potatoes’, ‘A Treeful of Pigs’, ‘The Dwarf Giant’… மேலும் விரிவான பட்டியலுக்கும் வாழ்க்கை வரலாறு, நேர்காணல் துண்டுகள் ஆகியவற்றுக்கும் இங்கே செல்வீர்.

இந்தப் படங்கள் ஹார்ப்பர் காலின்ஸின் Greenwillow என்ற பதிப்பு நிறுவனம் 2006இல் வெளியிட்ட மறுபதிப்பிலிருந்து ஸ்கேன் செய்தவை. படங்களின் அச்சுத் தரம் சுமாராகத்தான் இருக்கிறது.

This entry was posted on Tuesday, June 30th, 2009 at 3:36 pm and is filed under 1980கள், அட்டைப்படம், ஓவியம், சிறப்புப் பதிவுகள், சிறுவர் நூல், பாடநூல், பிற மொழி, புத்தகம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 Responses to “கடைக்குப் போகலாம் கைவீசு”

  1. ரஃபிக் ராஜா Says:

    ஏ பார் ஆபிள், பி பார் பலூன் என்று படங்களை பார்த்தே படித்து பழகிய நமக்கு, அந்த வார்த்தைகளுக்கு இப்படி ஓவியம் கூட தீட்ட முடியும் என்று கற்பனா சக்தியை வெளிபடுத்தி இருக்கும் அந்த பெண் ஓவியரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    நீங்கள் கூறியபடி அச்சுத்தரம் படங்களை உண்மையாக ரசிக்க முடியாமல் செய்திருப்பது தெளிவாக தெரிகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

  2. "சாத்தான்" Says:

    ஒரு மேட்டர் என்னவெனில், இந்த இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள் அனைத்தையும் flipkart.comஇல் வாங்க முடியும். லேண்ட்மார்க் போன்ற பெரிய புத்தகக் கடைகளில் கிடைக்காத க்ளாசிக் சிறுவர் நூல்களை அந்த சைட்டில் வாங்க முடிகிறது. நான் இது வரை இரண்டு வாங்கியிருக்கிறேன்.

  3. ரஃபிக் ராஜா Says:

    நானும் சில நாட்களாக பிலிப்கார்ட், இந்தியாபிளாசா போன்ற ஆன்லைன் தளங்களில் தான் சில புத்தகங்களை வாங்கி கொண்டிருக்கிறேன். உண்மையில் லாண்ட்மார்க போன்ற கடைகளில் கிடைக்காதவை கூட இங்கு கிடைப்பது ஆச்சர்யமாக இருக்கிறது…. அதோடு கூடவே 25 சதவிகிதம் வரை தள்ளுபடி வேறு….

    சீக்கிரத்தில் இந்த புத்தக கடைகள் அனைத்திற்கும் பெரும் போட்டியாக வந்து சேர போகிறது இப்படிபட்ட தளங்கள்…. இனி புத்தக பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்.

  4. "சாத்தான்" Says:

    குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பொறுத்த வரை புத்தகக் கடைகள் வேலைக்கு ஆகாது. இணையத்தில் தேடிப் பார்த்து உள்ளூர் இணையக் கடைகளில் வாங்கினால்தான் நம் குழந்தைகளுக்கு (நமக்கும்தான்) சிறந்த புத்தகங்கள் கிடைக்கும். எத்தனை நாள்தான் அற்புத உலகில் ஆலிஸையும் வின்னி த பூவையும் வைத்துக்கொண்டு ஓட்டுவது?

Leave a Reply