விவேக போதினி

1908 வாக்கில் தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிகையின் ஆண்டு மலருக்கு/இதழ் தொகுப்புக்கு/சிறப்பிதழுக்கு 1916இல் வந்த விளம்பரம். மேற்கத்திய பாணி அலங்கார வடிவமைப்பு. இந்த இதழ் வந்த சமயத்தில் மேற்கத்தியர்கள் இந்த மாதிரி வடிவமைப்பை நிறுத்திவிட்டார்கள் அல்லது நிறுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

வர்ணாசிரமத்தைப் போற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது. பயங்கரமான பார்ப்பனீயப் பத்திரிகை. The Hindu, சுதேசமித்திரன், வைசியமித்திரன் ஆகிய பத்திரிகைகளின் பாராட்டுரைகளுடன் கூடியது. முழு இதழும் இங்கு கிடைக்கிறது.

நன்றி: நாள் ஒரு நூல்

This entry was posted on Saturday, May 30th, 2009 at 9:43 am and is filed under 1910கள், அனாமத்து, கருப்பு-வெள்ளை, கோட்டோவியம், சிறப்புப் பதிவுகள், தமிழ், பத்திரிகை, விளம்பரம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 Responses to “விவேக போதினி”

  1. ரஃபிக் ராஜா Says:

    அருமையான வடிவமைப்பு கொண்ட முகப்பு… இப்போதைக்கு எந்த பத்திரிக்கையிலும் இந்த முறை பயண்படுத்துவது இல்லை. கோவில்கள் தூண்கள் கூட இக்காலத்தில் கான்க்ரீட் கொண்டு இழைக்கபடுவதால் இப்படி அலங்கார ஓவியங்களின் அணிவகுப்பை பார்ப்பது பழமையான இடங்களில் மட்டுமே சாத்தியம்.

    முன்பு பள்ளியில் படிக்கும் போது கிடைக்கும் ஒன்றிரண்டு சான்றிதழ்களில் இப்படிபட்ட அலங்கார ஓரங்களை கண்டிருக்கிறேன்… இப்போது கம்ப்யூட்டர் யுகத்தில் அவையும் நிரந்தமில்லாமல் போய் விட்டது :)

    ÇómícólógÝ

  2. "சாத்தான்" Says:

    மேற்கத்தியர்கள் தங்கள் பழைய வெகுஜன கலை சமாசாரங்களை பத்திரமாக வைத்திருப்பதால் இப்போது கூடப் புத்தக அட்டை வடிவமைப்பு, விளம்பரங்கள் ஆகியவற்றில் அவற்றைப் பார்க்க முடிகிறது. இங்கே நம்மிடம் என்ன இருந்தது என்றே பலருக்குத் தெரியாது.

  3. Viveka Bothini Ads: 1916 Tamil Magazine « 10 Hot Says:

    [...] வழி: விவேக போதினி [...]

Leave a Reply