மிஷா

படம்: Viktor Trinchenko

படம்: A. Sukhov

படம்: Sergei Kravchenko

படம்: Valentin Rozantsev

படம்: Dmitry Barabash

படம்: Sergei Kravchenko

படம்: E. Desiatnik

நம்மில் பலரது குழந்தைப் பருவத்தில் Misha என்ற ஆங்கில சிறுவர் மாத இதழுக்கு மறக்க முடியாத இடம் இருக்கும். சோவியத் பதிப்பகங்கள் நமக்கு அருமையான புத்தகங்களைத் தந்துகொண்டிருந்தபோது இந்தப் பத்திரிகையும் மாஸ்கோவிலிருந்து இறக்குமதியாகிக்கொண்டிருந்தது.

மிஷாவில் படக்கதைகள், அறிவுக் கட்டுரைகள், புதிர்கள், விடுகதைகள், விளையாட்டுகள், துணுக்குகள் எல்லாம் வண்ணமயமாக இருந்தன. உலக மாயாஜால, நாட்டுப்புறக் கதைகள் ஏராளமானவற்றை மிஷா படக்கதைகளாகத் தந்தது.

ராதுகா, மீர் பதிப்பகங்கள் உருவாக்கியிருந்த கனவுலகில் காணக்கிடைத்த காட்சிகள் மிஷாவிலும் இருந்தன. மிஷாவுக்காக வரைந்தவர்கள் ராதுகா, மீர் புத்தகங்களுக்கும் வரைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

சில இதழ்களில் Just You Wait! என்ற படக்கதை வந்தது. இது Tom and Jerryஇன் தழுவல் போல. ருஷ்யாவில் மிகப் பிரபலமான இந்தக் கதைத் தொடர் 80களில் அனிமேஷன் தொடராக தூர்தர்ஷனில் ஞாயிறு காலை ஒளிபரப்பப்பட்டது (அப்போதெல்லாம் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நல்ல வெரைட்டி இருந்தது).

சிறு வயதில் சந்தா கட்டியிருந்ததால் மாதம் தவறாமல் கிடைத்தது. சந்தா தொகையை தில்லி முகவரி ஒன்றிற்கு அனுப்ப வேண்டியிருந்தது போல் நினைவு.

மிஷா, Soviet Union பத்திரிகையின் தயாரிப்பு. Nikolai Gribachevஐ முதன்மை ஆசிரியராகவும் Valentin Rozantsev, Nikolai Shcherbakov ஆகியோரை வெவ்வேறு சமயங்களில் தலைமைக் கலைஞராகவும் கொண்டு வெளிவந்த இந்தப் பத்திரிகை 1983இல் நிறுவப்பட்டிருக்கிறது. இப்போதும் தொடர்ந்து வெளிவருகிறது. ஆனால் நிர்வாகம் மாறிவிட்டிருக்கும். பழைய மிஷா போல் இருக்குமா என்றும் தெரியவில்லை.

மிஷாவுக்கு உலகெங்கும் தீவிர ரசிகர்கள் இருப்பதை இணையத்தில் பார்க்கலாம். இந்தப் பத்திரிகையின் பழைய இதழ்கள் மிகமிக அரிதாகத்தான் கிடைக்கின்றன.

ஒரு புண்ணியவான் இங்கும் இங்கும் முழுசாக இரண்டு இதழ்களை வலையேற்றியிருக்கிறார்.

8 Responses to “மிஷா”

  1. Danny Says:

    Machi super machi.. Misha was one of my best childrens magazine I ever read or would ever read.. Golden days!!

  2. "சாத்தான்" Says:

    The sight of them makes you delirious, doesn’t it? :-)

  3. ரஃபிக் ராஜா Says:

    அருமையான ஒரு சிறுவர் இதழாக தெரிகறது இந்த மிஷா… எனக்கு டிங்கிள் மற்றும் பூந்தளிர் இதகளை நியாபகம் படுத்துகிறது அதன் வண்ணம் தோய்ந்த ஓவியங்கள் அடங்கிய பக்கங்கள். கடைகளில் இதை நான் கண்ட நியாபகம் இல்லை. ஒரு வேளை சந்தாதார்களிடம் மட்டுமே தஞ்சம் அடைந்த இதழ் போல். அந்த புண்ணியவான் தயவில் இரண்டு புத்தகங்களை மேயவாவது முடிந்ததே.

    எனக்கு அறிமுகபடுத்தியதற்கு நன்றிகள் நண்பரே.

    அப்போதெல்லாம் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நல்ல வெரைட்டி இருந்தது
    மறுக்க முடியாத உண்மை. சமீபத்தில் தொடங்கப்பட்ட சுட்டி TV, இதை நினைவில் கொண்டுதான் DD யில் வெளியான புகழ்பெற்ற சித்திர தொடர்களை மீண்டும் ஒளிபரப்பி கொண்டிருக்கிறது… ஸ்பைடர்மேன், ஹீ மேன், கதைகளை மீண்டும் காண்பதில் தான் எவ்வளவு மகிழ்ச்சி.

    இப்போது இருக்கும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் படு சுமார் ரகம் என்பதில் எந்த ஐயமுமில்லை.

    ÇómícólógÝ

  4. "சாத்தான்" Says:

    ஒரு நல்ல சிறுவர் பத்திரிகை என்ற முறையில் மிஷா மிக சக்திவாய்ந்த ஒரு பத்திரிகை என்று சொல்லலாம். டி.வி. என்று பார்த்தோமானால் ஸ்பைடர்மேன் (60இல் வந்து 80களில் தூர்தர்ஷனுக்கு வந்தது), Barbapappa, Street Hawk, Pingu, Different Strokes, Poirot, Didi’s Comedy Show உட்பட நல்ல ரேஞ்ச் இருந்தது. சில தொடர்களின் பெயர் நினைவில்லை. இப்போது டி.வி.காரர்களுக்குப் பணம் கண்ணை மறைக்கிறது.

  5. D.R.Ashok Says:

    MIshava மறந்தே போய்ட்டேன் சட்டுன்னு உங்க சைட்ல பாத்ததும் திடீர் அதிர்ச்சிதான்… அதுல இருந்த ஒரு கரடி படத்த ‘குட்டி & குண்டு’ drawing competitionla வறஞ்சி, I won 2nd prize in R.R.Sabha. It was in 1986. (viI std)

    u r always touches ‘NASTALGIA’…

    Rathanabala, gokulam, poonthalir,lion, leo, Rani comics…ippadi niraya…

  6. "சாத்தான்" Says:

    மிஷாவை மறக்க முடியாதுதான். தரத்தில் அதற்கு அடுத்து நம்மூரில் பூந்தளிரைச் சொல்லலாம். கோகுலம், ரத்னபாலாவை நினைத்தால் குலை நடுங்குகிறது. :-)

  7. Vinoth Says:

    It was really good to reminesce our childhood days with Misha. I used to read this at my native where my grandpa used to subscribe these for us. Was searching all around the net and in shops in London for this. Its exciting to see those illustrations and esp the Adventures of Dennis in one another site. Though I couldnt recall much of the character list, I m sure one look at the book and I would be home :)
    Thanks.

  8. சாத்தான் Says:

    Thanks for the visit and comment, Vinoth. Misha is very much missed! It is still being published, though obviously it couldn’t be what it used to be. You can try subcribing it at Amazon.

Leave a Reply