சிவகாமியின் சபதம்

கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ 1944இல் கல்கி பத்திரிகையில் தொடராக வந்தது. நாவலுக்கு வர்மா வரைந்த ஓவியங்கள் இவை (எல்லாம் முதல் பாகத்திலிருந்து). ஒரு சில குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் வர்மாவை உலகின் மிகப் பெரிய illustratorகளில் ஒருவர் என்று சொல்லலாம்.

பொன்னியின் செல்வனுக்குப் படம் வரைந்த இன்னொரு மாபெரும் ஓவியர் மணியம் கூட ஒரு அத்தியாயத்திற்கு சில கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார். இந்தத் தொடர்கதை பைண்டிங் புத்தகம் உடையா நிலையில் இருந்திருந்தால் இன்னும் பல படங்களை ஸ்கேன் செய்திருக்கலாம்.

This entry was posted on Thursday, May 28th, 2009 at 4:10 pm and is filed under 1940கள், ஓவியம், கருப்பு-வெள்ளை, கோட்டோவியம், சிறப்புப் பதிவுகள், தமிழ், பத்திரிகை, பெண்கள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 Responses to “சிவகாமியின் சபதம்”

  1. ரஃபிக் ராஜா Says:

    குறைகளா, என் கண்களுக்கு அனைத்து நிறைகளாகதான் தெரிகிறது….. வர்மா, மணியன் என்ற அற்புத ஓவியர்களை உலகுக்கு அறிமுகம் செய்த பொற்காலம் தான் அது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

    பழைய புத்தகங்களை ஸ்கான் செய்யும்போது, அது உடையும் நிலையை பார்க்க மனதிற்கு ஒவ்வாத ஒன்று தான். இவற்றையெல்லாம் கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது, பிளாஸ்டிக் லேமினேட் செய்தவாது காப்பாற்ற முயல வேண்டும்.

  2. "சாத்தான்" Says:

    இந்த நிலைமையில் இருக்கும் புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் புத்தகங்களை மதிக்காத நமது கலாச்சாரத்தைத்தான் நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இணையத்தில் பழைய புத்தக விரும்பிகளின் வலைப்பதிவுகளைப் பார்த்தால் அவனவன் 200 வருடப் பழசான புத்தகங்களைக் கூட மெகுரு குறையாமல் வைத்திருக்கிறார்கள். உதாரணமாக

  3. ரஃபிக் ராஜா Says:

    அதில் ஒரு விஷயத்தை கண்டீர்களா, அந்த புத்தகங்கள் எல்லாம் நல்ல தரமான காகிதத்தில், தடிமனான அட்டை வைத்து, கார்னர் பைன்டிங் செய்து வெளிவந்திருக்கின்றன. எனவே நம் வாசகர்களை மட்டும் குற்றம் சொல்வதை விட, பதிப்பாளர்கள் அந்த அளவு பிரயத்தனம் எடுக்கவில்லையே என்று குறை தான் மேலோங்கி இருக்கிறது.

    புத்தகம் வெளியிட்டால் போதும், அதன் தரம் பற்றி கவலை இல்லை, என்ற எண்ணம் இன்றும் பதிப்பாளர்கள் மத்தியில் இருக்கிறது. விலையை காரணம் காட்ட அவர்கள் முயன்றாலும், அது வெறும் சப்பை கட்டு மட்டுமே.

    ÇómícólógÝ

  4. "சாத்தான்" Says:

    அதுவும் சரிதான். எலித் தொல்லை, காகிதம் தின்னும் பூச்சிகள் போன்ற லோக்கல் பிரச்சினைகளையும் மறந்துவிடக் கூடாது.

    என்னிடம் க்ளாத் பைண்டிங் செய்த 19ஆம் நூற்றாண்டு திருக்குறள் பதிப்பு ஒன்று இருக்கிறது. அது இப்போது கூட நல்ல நிலையில் இருக்கிறது. அந்த மாதிரிப் புத்தகங்களை பரணில் கடாச யாருக்கு மனம் வரும்?

  5. ரஃபிக் ராஜா Says:

    19ம் நூற்றாண்டு புத்தகமா…?

    ஹ்ம்ம்…. என்னிடம் மிஞ்சி மிஞ்சி போனால் 1940 வது வருடத்திற்கு பிந்தைய புத்தகங்கள் கூட இருக்குமா என்று தெரியவில்லை. குடுத்து வைத்தவரய்யா நீங்கள் :)

    ÇómícólógÝ

  6. "சாத்தான்" Says:

    பழைய புத்தகக் கடைகளில் எது வேண்டுமானாலும் கிடைக்கலாம். :-)

  7. Bee'morgan Says:

    வாவ்… :) சூப்பர்.. நான் பொன்னியின் செல்வனுக்கு மணியம் வரைந்த ஓவியங்களைத் தேடுகையில் எதைச்சையாகத்தான் இங்கு வந்தேன்.. அருமையான தொகுப்பு.. நன்றி.. :) :) :)

    பொசெ, மணியம் ஓவியங்கள் உள்ளதா தங்களிடம்?

  8. "சாத்தான்" Says:

    இல்லை :-( ஆனால் தேடிக்கொண்டிருக்கிறேன். வருகைக்கு நன்றி, பீமார்கன்!

Leave a Reply