அற்புத உலகில் ஆலிஸின் சாகசங்கள்

லூயிஸ் கேரல் (Lewis Carroll) எழுதி 1865இல் வெளிவந்த Alice’s Adventures in Wonderlandக்கு பிரிட்டிஷ் ஓவியர் சர் ஜான் டென்னியல் (Sir John Tenniel, 1820-1914) வரைந்த புகழ்பெற்ற கோட்டோவியங்கள். இந்தப் படங்கள் மரத்தில் செதுக்கப்பட்டு மரச் செதுக்கோவிய முறையில் அச்சிடப்பட்டன. டென்னியல் பற்றி இடுகையின் இறுதியில்.

* * *

* * *

* * *

* * *

* * *

பலருக்கும் ஜான் டென்னியல் என்றால் ‘அற்புத உலகில் ஆலிஸின் சாகசங்கள்’*தான் நினைவுக்கு வரும். இவர் Punch பத்திரிகைக்காக வரைந்தவை உட்பட ஏராளமான சித்திரங்களும் கார்ட்டூன்களும் (சுமார் 2,300) வரைந்திருக்கிறார். 1840இல், 20ஆம் வயதில், தந்தையுடன் கத்திச் சண்டை பயிற்சி செய்தபோது ஒரு கண்ணில் காயம் பட்டுப் பார்வையிழந்தார் டென்னியல்.

1850இல் இணை கார்ட்டூனிஸ்ட்டாக Punchஇல் சேர்ந்தார். 1865இல் வந்த ஆலிஸ் புத்தகத்தின் அச்சுத் தரம் பற்றி டென்னியல் கடுப்பு தெரிவித்ததால் அச்சிட்ட 2,000 பிரதிகள் கைகழுவப்பட்டன. 1866இல் வந்த இரண்டாம் பதிப்பு அவரை மிகப் பிரபலமாக்கியது. 1893இல் அவருக்கு சர் பட்டம் கொடுக்கப்பட்டது.

ஜான் டென்னியல் படம் போட்ட பிற புத்தகங்களில் சில: Aesop’s Fables, லூயிஸ் கேரலின் Through the Looking Glass, The Arabian Nights.

அற்புத உலகில் ஆலிஸுக்கு டென்னியல் வரைந்த படங்களின் பிளாக்குகள் ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள போட்லியன் நூலகத்தில் பத்திரமாக இருக்கின்றன. டென்னியல் பற்றி மேலும் விவரங்கள்

* சுருக்கமாக ஆலிஸின் அற்புத உலகம்அற்புத உலகில் ஆலிஸ்

பி.கு.: இந்த இடுகையிலுள்ள படங்கள் Scholastic Junior Classicsஇன் 2001ஆம் ஆண்டுப் பதிப்பிலிருந்து ஸ்கேன் செய்தவை.2 responses to “அற்புத உலகில் ஆலிஸின் சாகசங்கள்”

  1. அதிசய உலகில் ஆலிஸ் நாவலுக்கு உயிர் குடுத்து ஓவியங்கள் மூலம் நடமாட வைத்ததில் டேனியலின் பங்கு இன்றி அமையாததாயிற்றே…. இவரின் பல ஓவியங்களை நூலகங்களில் ரசித்து பார்த்திருக்கிறேன். என்ன அப்போது ஓவியங்கள் மீது மற்றுமே லயிப்பு இருந்தது, இப்போது போல பிண்ணணியில் உழைத்த ஓவியர்களை பற்றி இப்போது தான் அறிய முடிகிறது.

    படங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே…. முக்கியமாக அரசவையில் ராணியின் முக பாவம், மற்றும் மரத்தின் மீது இருந்து சிரிக்கும் பூனை, அருமை.

    ÇómícólógÝ

  2. நன்றி ரஃபிக்.