Vanity Fair 1935

Vanity Fair பத்திரிகையின் ஜனவரி 1935 இதழின் அட்டை. ‘அங்கிள் சாம்’ கேலிச் சித்திரத்தை வரைந்தவர் மெக்சிகோ நாட்டு ஓவியர், வரலாற்றறிஞர் Miguel Covarrubias (1904-1957). அந்தக் காலகட்டத்தில் மிகப் பிரபலமான சித்திரக்காரர் (illustrator). பல பெரிய பத்திரிகைகளுக்கும் விளம்பரங்களுக்கும் வரைந்திருக்கிறார்.

9ஆம் பக்க விளக்கம்:

இந்த இதழை வேனிட்டி ஃபேர் இலவசமாகத் தருகிறது (Save என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்). வேனிட்டி ஃபேர் தனது பழைய அட்டைப்படங்களையும் புகைப்படங்களையும் ஃப்ரேம் போட்டு அநியாய விலையில் விற்பனைக்கு வைத்திருக்கிறது. ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் போன்ற பத்திரிகைகளும் கொஞ்சம் வணிக அறிவைப் பயன்படுத்தி நியாயமான விலையில் விற்கலாம். விகடனுக்கு சமீபத்தில்தான் தனது பழைய உள்ளடக்கத்தில் கவனம் திரும்பியிருக்கிறது. மற்றவர்கள் அது பற்றி யோசிப்பது போலவே தெரியவில்லை.

»மிகெல் கொவார்ருபியாஸின் அட்டகாசமான ஓவியங்கள் சில

» விக்கிபீடியா தகவல்

This entry was posted on Tuesday, April 21st, 2009 at 12:09 pm and is filed under 1930கள், அட்டைப்படம், ஓவியம், பத்திரிகை, பிற மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 Responses to “Vanity Fair 1935”

  1. ரஃபிக் ராஜா Says:

    அடடா, ஓவியரின் திறமையை என்ன என்று பாராட்டுவது,,, எப்போதும் சீரியஸாக தோன்றும் மாமா சாமை காமடியாக வரைந்துள்ளாரே என்று நினைத்தால், அதிலும் பாவமாக இன்னொரு அவதாரமா…..

    புத்தகம் இலவசம் என்று கூறி… கூடவே EXE என்ற இரும்புத்திரை பார்மட்டில் வெளியிட்டிருப்பதிலேயே பதிப்பகத்தினரின் வியாபார மூளை நன்றாக வெளிபடுகிறது.

    தற்போதை விகடனின் தரத்தையே, அமைப்பு உட்பட கெடுத்து வைத்திருக்கும், பதிப்பாளர்களிடம் பழைய புத்தக வியாபார யுத்தி தட்டுபட வாய்ப்பு கம்மி தான்.

    பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  2. "சாத்தான்" Says:

    ரஃபிக், அது zip கோப்பில் jpg தொகுப்பாகவும் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். ஆப்ஷனில் பாருங்கள்.

  3. ரஃபிக் ராஜா Says:

    ஆமாம் அதையும் முன்பே கவனித்தேன். ஆனால் இரண்டும் ஒரே சைஸில் இருப்பதை வைத்து பார்த்தால் அந்த ஜிப் தொகுப்பின் உள்ளே இந்த EXE பூதம் தான் இருக்கும் என்று நினைத்தேன்.

    சரி காசா பணமா அதையும் தருவித்து பார்த்து விட வேண்டியதுதான். :)

Leave a Reply