Cities of the World
எனக்குப் பிடித்த பதிப்பகங்களில் ஒன்றான Taschenஇன் Cities of the World என்ற புத்தகத்திலிருந்து. 1572-1617 ஆண்டுகளுக்கிடையே வரைபடவியலாளர் Franz Hogenberg வரைந்த செதுக்கோவியங்கள் இவை. ஹோகன்பர்கும் பதிப்பாளர் George Braunஉம் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்த நகரங்களைக் கண்டு அவற்றின் அமைப்பையும் காட்சிகளையும் ஏராளமான ஓவியங்கள், வரைபடங்கள் போன்றவற்றில் பதிவுசெய்து Civitates என்ற புத்தகத்தைப் பதிப்பித்தார்கள். அவற்றை Stephan Füssel, Rem Koolhaas என்று இரண்டு அறிஞர்கள் தொகுத்திருக்கிறார்கள். பிரமிப்பூட்டும் இந்தப் புத்தகம் முழுவதையும் இங்கே பார்த்துவிடலாம்.




