ழ

எழுபதுகளின் இறுதியில் தொடங்கி எண்பதுகளின் இறுதி வரை வந்த ‘ழ’ சிற்றிதழின் அட்டைகள். ஞானக்கூத்தன், ஆத்மாநாம், ஆர். ராஜகோபாலன் என்று வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு கவிஞர்கள் ஆசிரியராக இருந்தார்கள். ஆத்மாநாமின் மரணத்திற்குப் பின் சிறிது காலம் (ஆண்டுகள்?) நின்றுபோன பின் 1986இல் மீண்டும் வரத் தொடங்கிப் பிறகு நின்றது. 1992 வரை வந்த மாதிரி நினைவு. இந்தப் படங்கள் வெகுஜன வகையில் சேராதவை என்றாலும் வின்டேஜ் மதிப்புக்காக இங்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

(ஜனவரி 1981 இதழ்)



மேற்கண்ட படத்தை ‘கஙய‘வின் மே 1978 இதழிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓவியப் பஞ்சம்? கிடைமட்டமான அட்டை நல்ல ஐடியா.





April 17th, 2009 at 12:01 am
தோழர்,
நீண்ட நாள் கழித்து ஆத்மாநாம் அவர்களை நினைவுபடுத்தி விட்டீர்கள்.
கடைசியாக அவரின் எழுத்துக்களை உங்கள் ஜுனியர் மாத நாவலில் 1992ல் படித்தேன். பின்பு இந்த உலகமே அவரை மறந்து விட்டதோ என்று கூட நினைத்தேன் (அல்லது அவரை பற்றி வரும் புத்தகங்களை நான் படிப்பதில்லை?).
ஆனந்த் வரைந்த அந்த ஓவியம் என்னை கவர்ந்தது.
கிங் விஸ்வா.
Carpe Diem
தமிழ் காமிக்ஸ் உலகம்
April 17th, 2009 at 1:14 am
உண்மைதான், வெகுஜன கலையுடன் ஒத்து போக வில்லை என்றாலும், வித்தியாசமான முயற்சி தான். ழ என்று இதழுக்கு பெயர் சூட்டியதிலேயே தெரிகிறது. பகிரிந்தமைக்கு நன்றி நண்பரே.
ஆமாம், சென்ற பதிவில் நூறாவது கருத்தை நான் இட்டதாக கூறினீர்களே… வார்ட்ப்ரஸ்ஸில் இப்படி பட்டியல் பார்க்கும் வசதி இருக்கிறதா…? இதற்காக என் ப்ளாக்கர் வழைத்தளத்தில் ஒரு ஸ்கிரிப்ட் சேர்க்க வேண்டி இருந்தது.
April 17th, 2009 at 9:17 am
@விஸ்வா: ஜூனியர் மாத நாவலில் ஆத்மாநாம்? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆத்மாநாமை யாரும் மறக்கவில்லை. குறிப்பாகப் பதிப்பகங்கள். அவரையும் ஒரு பிராண்ட் ஆக்கிவிட்டார்கள். சில தொகுப்புகள் கூட வந்தன.
@ரஃபிக்: வேர்ட்பிரஸ் டேஷ்போர்டில் தானாகத் தெரியும். இங்கே பாருங்கள்.
April 19th, 2009 at 1:42 pm
அருமை, வார்ட்ப்ரஸ் ப்ளாக்கரை விட சிறந்தது என்று சும்மாவா கூறுகிறார்கள்….
April 21st, 2009 at 2:13 am
வாவ்!!