ராஜயோகம்

கல்கியில் 1964இல் தொடங்கி அனேகமாக 1965 வரை வெளிவந்த ‘ராஜயோகம்’ நகைச்சுவைப் படக்கதைத் தொடரிலிருந்து. வரைந்தவர் செல்லம், கதை: தம்பு. கொஞ்சம் மெனக்கெட்டால் வசனங்களைப் படிக்கலாம். நல்ல காமெடி. Evocative கூட.






செல்லம் வாண்டுமாமா கதைகளுக்கு வரைந்த படங்களைப் பார்த்திருக்கிறேன். அது கொஞ்சம் அரஸ் வகை கோட்டோவியங்கள் போலிருக்கும். அவற்றை விட இந்தப் படக்கதை வந்த காலத்தில் செல்லம் வரைந்த கோட்டோவியங்கள் நன்றாக இருக்கின்றன. பல ஓவியர்கள் ஆரம்ப காலத்தில் நன்றாக வரைந்திருக்கிறார்கள்.



April 15th, 2009 at 9:59 am
தோழர்,
வாண்டு மாமா, முல்லை தங்கராசன் ஆகியோருடன் இனைந்து செல்லம் அவர்கள் வரைந்த காமிக்ஸ் கதைகள் தமிழ் மொழியின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.
இவர் தன்னுடைய மனைவியின் பெயரிலும் கூட வரைந்து இருக்கிறார்.
அந்தக் காலத்தில் (அறுபதுகளில்) இங்கிலாந்தில் போட்டோ காமிக்ஸ் பிரபலம் ஆகியபோது, தமிழிலும் கூட டணால் தங்கவேலுவை வைத்து போட்டோ + காமிக்ஸ் என்று கலக்கியவர் இவர்.
தினமணி மதி கார்ட்டூன் போல ஐவரும் முரசொலி இதழில் அரசியல் கார்ட்டூன் வரைந்தவர்.
சமீபத்தில் இவரை சந்தித்த போது மனம் மிகுந்த வேதனை பட்டது. மேல் விவரங்களை விரைவில் பதிக்கிறேன்.
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
April 15th, 2009 at 2:41 pm
விஸ்வா, வழக்கம் போல் அரிய தகவல்களைத் தந்திருக்கிறீர்கள், நன்றி! செல்லம் வரைந்து வாண்டுமாமா தமிழாக்கிய Lost World (தமிழில் தலைப்பு நினைவில்லை) சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்தது. இப்போதும்தான். பழனியப்பா பிரதர்ஸ் வெளியீட்டில் அது இப்போதும் கிடைக்கிறது. என்னிடம் இருக்கிறது. தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் அதையும் இங்கே ஸ்கேன் செய்து போடுவேன்.
April 15th, 2009 at 11:13 pm
தோழர்,
அறிய தகவல்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ நாம் படித்தது, நினைவில் இருந்ததை பகிர்கிறேன். வேறொன்றும் இல்லை.
நீங்கள் கூறும் அந்தக் கதை //செல்லம் வரைந்து வாண்டுமாமா தமிழாக்கிய Lost World (தமிழில் தலைப்பு நினைவில்லை) சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்தது. இப்போதும்தான். பழனியப்பா பிரதர்ஸ் வெளியீட்டில் அது இப்போதும் கிடைக்கிறது// Sir Arthur Conan Doyle எழுதிய கதையை வாண்டுமாமா தமிழாக்கம் செய்து “அழிந்த உலகம்” என்ற பெயரில் 1987 ஜனவரி மாதம் முதல் பூந்தளிர் சிறுவர் இதழில் தொடர் கதையாக ஆரம்பித்தனர்.
என்னிடம் இன்னமும் அந்த புத்தகம் உள்ளது.
கிங் விஸ்வா.
Carpe Diem
தமிழ் காமிக்ஸ் உலகம்
April 16th, 2009 at 12:43 am
அழிந்த உலகம்! நாளைக்கு எனக்கு முக்கிய வேலை அதைத் தேடுவதுதான். பூந்தளிர் எனக்கு அந்தக் காலத்து ஃபேவரைட். பிடிக்காதது கோகுலம்.