மூன்று ஆண்டுகள்

அந்தோன் சேகவ் (Anton Chekhov) எழுதிய ‘மூன்று ஆண்டுகள்’ நாவலுக்கு வென்யாமின் பாஸவ் (Veniamin Bazov?) வரைந்த படங்கள் கீழே. வெளியிட்டது அயல் மொழிப் பதிப்பகம், மாஸ்கோ (Foreign Languages Publishing House). ‘ருஷ்ய அமர இலக்கிய ஆசிரியர்கள்’ வரிசை. வெளிவந்த ஆண்டு குறிப்பிடப்படவில்லை. 1980களின் இறுதியில் வந்திருக்கலாம். மொழிபெயர்ப்பு: அ. கிருஷ்ணமூர்த்தி.
தலைப்புப் பக்கம்…

முதல் பக்க ஸ்கேன். கிட்டத்தட்ட நிஜ அளவு (actual size) …

கெட்டி அட்டை கொண்ட அழகான கையடக்கப் புத்தகம். தமிழில் அழகான புத்தகம் போட உருசியாக்காரர்கள் வேண்டியிருக்கிறது.



April 8th, 2009 at 3:52 pm
தோழர்,
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.
இப்போது இருக்கும் பதிப்பகங்கள் எல்லாமே பேபர் தரத்தை கவனிப்பது இல்லை.
முன்பெல்லாம் ருசிய நாட்டு புத்தகங்கள் தாராளமாக கிடைக்கும்.
இப்போது? இந்த நியூ செஞ்சுரி குப்பையாக ஏதோ போடுகிறார்கள்.
எழுபதுகளில் வந்த ருசிய வரலாற்று காமிக்ஸ் வடிவ புத்தகத்தை இப்போது அவர்கள் வெளியிட்டு இருப்பது உங்களுக்கு தெரியும். மட்டம்.
//தமிழில் அழகான புத்தகம் போட உருசியாக்காரர்கள் வேண்டியிருக்கிறது// முற்றிலும் சரி.
கிங் விஸ்வா.
April 8th, 2009 at 3:55 pm
அந்த ருசிய வரலாற்று காமிக்ஸ் (எழுபதுகளில் வந்த பதிப்பு) என்னிடம் உள்ளது, இதைப் போன்றே ஒரு அயல் மொழிப் பதிப்பகமா இல்லை வேறு யாராவதா என்று தெரியவில்லை. அந்த பக்கம் கிழிந்து உள்ளது.
ஆனால் நல்ல தரமான தாள்கள்,தெளிவான பிரிண்டிங் என்று உயர்ந்த தரத்தில் வெளியிட்டு இருந்தார்கள்.
கிங் விஸ்வா.
April 8th, 2009 at 5:11 pm
அது ‘முன்னேற்றப் பதிப்பகம்/Progress Publishers’ வெளியிட்டதுதான். நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் மறுபதிப்பில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்னிடம் இருப்பது ஆங்கில வடிவம். அது 1985இல் வந்த Progress Publishers வெளியீடு.