
குமுதத்தில் 1966 ஜூலை 28 இதழில் தொடங்கிய Phantomஇன் தமிழாக்கத்தின் முதல் அத்தியாயம். மூலம் Lee Falk. மொத்தம் 31 அத்தியாயங்கள். மொழிபெயர்ப்பாளர் பெயர் போடவில்லை. முதன்முதலில் தமிழ்ப் பத்திரிகையில் தமிழாக்கப்பட்ட காமிக்ஸ் கதை என்று இதைச் சொல்லலாமா? பெரிதாக்கிப் பார்க்க க்ளிக் செய்க.
March 13th, 2009 at 3:46 pm
சாத்தான் அன்பரே (வித்தியாசமான புனை பெயர் தான்), ராணி காமிக்ஸ் வலைப்பூவில் உங்கள் கருத்தை பார்த்து இங்கு வருகை தந்தேன். உண்மையிலேயே மாயாவியின் முதல் தமிழாக்கம் செய்யபட்ட சித்திரகதை இதுவாகத்தான் இருக்கும். ஆனால் அக்காலங்களில் முறையாக உரிமம் பெற்றிருந்து இருப்பார்களா என்று சந்தேகமே. எனக்கு தெரிந்து மாயாவி அதிகம் வெளியானது மாலை மலரில் தான் என்று நியாபகம். ஆனால் குமுதம் அதையும் மிஞ்சியது என்று இப்போது தான் அறிகிறேன். தகவலுக்கு மிக்க நன்றி. புதிய மாயாவி பதிவில் உங்கள் பங்களிப்பை பகிர்ந்து கொள்கிறேன்.
March 13th, 2009 at 4:09 pm
ரஃபிக், அந்தக் காலத்தில் மாலை மலரை விட குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு காமிக்ஸ் மாதிரியான விஷயங்களில் exposure அதிகம் இருந்திருக்கலாம் அல்லவா? மாயாவி முழுக் கதையையும் இங்கே ஸ்கேன் பண்ணிப் போடலாம் என்று நினைத்தேன், ஆனால் காப்பிரைட் தடுக்கிறது, அதோடு பைண்ட் செய்தவர் ஒரு அத்தியாயத்தை விட்டுவிட்டார். வருகைக்கு நன்றி!
March 27th, 2009 at 8:22 pm
தோழர்,
நீங்கள் ஏன் டெக்ஸ்வில்லர் தளத்தை தொடரவில்லை என்று நான் ஒரு வருடத்திற்கு முன்பு கேட்டதிற்கு நீங்கள் இன்னும் விடை அளிக்க வில்லை.
ஆனால், அதனை விட சிறப்பாக இந்த தளம் உள்ளது. நான் உங்களின் மைய நீரோட்டம் தளத்திற்கு ரெகுலர் ஆக வருபவன். அதனால் உங்கள் ரசனை பற்றி தெரியும். தொடருங்கள். விரைவில் இதனை போலவே இன்னொரு பதிவை நீங்கள் எதிர் பார்க்கலாம் (In My Blog, Of Course).
உங்களிடம் பாலகன் காமிக்ஸ் Falcon Comics (தமிழ்) உள்ளதா? இருந்தால் அதில் எட்டாம் புத்தகத்தில் உள்ள விளம்பரத்தை பாருங்கள். அதில் நமது ஜெயலலிதா மேடம் அவர்கள் விளம்பர மாடல் ஆக இருப்பார்கள் ஒரு எண்ணெய் கம்பெனி விளம்பரத்திற்கு. முடிந்தால் அந்த விளம்பரத்தையும் வெளியிடுங்கள்.
என்னிடம் அந்த புத்தகம் இப்போது இல்லை. மன்னிக்கவும்.
பின்னை இதே குமுதம் இதழில் வேதாளன் கதை முழு வண்ணத்தில் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் (எண்பதுகளில் மற்றும் தொண்ணுறுகளில்).
மாலைமதி நிறுவனத்தினர் வெளியிட்ட AFI காமிக்ஸ் உங்களிடம் இருக்கிறதா? அது தான் தமிழில் வந்த முழுமையான காமிக்ஸ் (இந்திரஜால் மற்றும் பாலகன் காமிக்ஸ் ஹிந்தி மொழி புத்தகத்தின் தமிழாக்கம் ஆகும்).
விரைவில் உங்களை நேரில் சந்திக்க விழைகிறேன்.
நன்றி.
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
March 27th, 2009 at 10:34 pm
வணக்கம், கிங் விஸ்வா. ‘இங்கே ஒன்றும் இல்லை’ என்ற taglineஐக் கொண்ட மையநீரோட்டத்திற்கு நீங்கள் வருவது குறித்து மகிழ்ச்சி.
டெக்ஸ் வில்லர் வலைப்பதிவு பற்றி நீங்கள் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டியதுகட்டியக்காரன் என்ற அக்கிஸ்ட்டிடம். ஏனென்றால் அவர்தான் அந்த வலைப்பதிவை ஆசையாகத் தொடங்கிக் கைவிட்டவர். காமிக்ஸ்களை வெறியுடன் தொடர்ந்து சேகரிப்பவர். நல்ல கலெக்சன் வைத்திருக்கிறார். நீங்கள் சொல்லும் புத்தகங்கள் அவரிடம் இருக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் அவரிடமே நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும் வண்ணம் கேட்கலாம்.
நீங்கள் சொல்லும் எந்த காமிக்ஸும் என்னிடம் இல்லாதது மட்டுமில்லை, பாலகன், ஏஎஃப்ஐ பற்றியெல்லாம் கேள்விப்பட்டது கூட இல்லை.
‘மேடம்’ பற்றி நீங்கள் சொல்லும் விளம்பரம் ரெமி ஹேர் ஆயில்தானே?
அந்த விளம்பரங்கள் என்னிடமுள்ள குமுதம் ‘முகமூடி’ பைண்டிங்கில் இருக்கிறது. அந்த விளம்பரங்களை எதிலாவது போடலாமா என்று கூட நேற்றுதான் யோசித்துக்கொண்டிருந்தேன்! ஆனால் அதில் ஓவியர்களின் கைவண்ணம் எதுவும் இல்லாததால் போடவில்லை.
எனக்கு காமிக்ஸ் மிகவும் பிடிக்கும் என்றாலும் வெறி எல்லாம் இல்லை. தமிழ் காமிக்ஸ் வரலாறு எழுத உங்களைப் பிடிக்கலாம் போலிருக்கிறது.
March 27th, 2009 at 10:55 pm
தோழர்,
கட்டியக்காரன் அவர்களை எங்கே பிடிப்பது? அதனால் தான் உங்களிடம் கேட்டேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
//தமிழ் காமிக்ஸ் வரலாறு எழுத உங்களைப் பிடிக்கலாம் போலிருக்கிறது// அந்தப் பணி ஏற்கனவே நடந்து கொண்டு இருக்கின்றது தோழர். இன்னும் சில பல நேர்-முகங்கள் மட்டுமே பாக்கி உள்ளன. அவையும் நிறைவு பெற்றால் புத்தகம் தயார் தான்.
உங்கள் மைய நீரோட்டம் பற்றி எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் திரு ஜோஸ் (www.sharehunter.wordpress.com) ஆவார்.
மேடம் படம் போட்ட அந்த விளம்பரம் இருந்தால், அதனை எனக்கு மின் அஞ்சலில் அனுப்பி வைத்தால், மிகவும் மகிழ்வேன். நான் விளம்பரம் குறித்த பதிவு ஒன்றை இட உத்தேசித்து உள்ளேன். மிகவும் உதவியாக இருக்கும்.
பதில் அளித்ததற்கு மிகவும் நன்றி.
கிங் விஸ்வா.
March 27th, 2009 at 11:03 pm
நீங்கள் தவறாக எதுவுமே சொல்லவில்லை.
கட்டியக்காரனுக்குத் தெரிவித்துவிட்டேன்.
அந்த விளம்பரங்களைக் கண்டிப்பாக உங்களுக்கு ஸ்கேன் செய்து அனுப்புகிறேன்.
உங்கள் காமிக்ஸ் வரலாறு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
March 27th, 2009 at 11:29 pm
தோழர்,
மிகவும் நன்றி. அந்த படங்களை எதிர் நோக்கி உள்ளது எனது மின் அஞ்சல் பெட்டி.
கிங் விஸ்வா.
March 27th, 2009 at 11:57 pm
உங்கள் ஜிமெயில் முகவரிக்கு அனுப்பி அரை மணிநேரம் ஆகிவிட்டது.
March 29th, 2009 at 10:55 am
நண்பரே, அந்த விளம்பரத்தை எனக்கும் அனுப்பி வைக்க முடியுமா, இல்லை என்றால் உங்கள் பதிவு ஒன்றில் இடம் பெற செய்யுங்கள். அதை பார்க்க ஒரு ஆவல் தான்
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்