கடையநல்லூர் கௌபாய்

விதி #1: வண்ணத்தில் போட வேண்டியதை வண்ணத்தில்தான் போட வேண்டும். விதி #2: தேவையில்லாத வர்ணனை, வசனம் கூடாது. படம் வரைந்தவர் பெயர் தெரியவில்லை. ‘சித்திரக்குள்ளன்’ என்ற சிறுவர் பத்திரிகையின் மே 1950 இதழிலிருந்து. இன்னும் இரண்டு…

‘அங்கு’ எழுதிய ‘மலை வீடு’ தொடர்கதைக்கு சாகர் வரைந்த படம் கீழே. அந்தக் காலத்தில் தொடர்கதை என்றால் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு லோகோ போட்டிருக்கிறார்கள்…

இது சர்மா வரைந்தது (தமிழ்நாட்டில் வந்த முதல் சில கௌபாய்களில் ஒருவராக இருக்க வேண்டும்) -

நன்றி: நாள் ஒரு மின்னூல். ஸ்கேனர் கிட்டத்தட்ட ரெடி.

This entry was posted on Tuesday, March 31st, 2009 at 12:59 am and is filed under 1950கள், அனாமத்து, கருப்பு-வெள்ளை, கார்ட்டூன், கோட்டோவியம், தமிழ், பத்திரிகை. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 Responses to “கடையநல்லூர் கௌபாய்”

  1. ரஃபிக் ராஜா Says:

    நண்பரே, ஒப்பு கொள்ளதான் வேண்டும். தமிழில் முதல் கவ்பாய் தொடர் இதுவாக தான் இருக்கும். 1950 களில் அன்னிய மொழி கவ்பாய் தொடர்கள் இங்கு அறிமுகம் ஆகி இருப்பதற்கு சாத்ய கூறுகள் கம்மியே.

    ஆனாலும், இந்தியாவில் கவ்பாய் தொப்பியுடன் ஒரு கதாபாத்திரம், சற்று ஓவர் சித்தரிப்பு தான் இல்லையா ?

    முதல் படத்திற்கு காரணம், ஓவியருக்கு சித்திரக்கதை மற்றும் எழுத்துகதை வித்தியாசம் தெரியாமல் இருந்து இருப்பதே. இப்படி பல விஷயங்களை அக்கால புத்தகங்களிள் எளிதாக காணலாம்.

    காமிக்கியல்

  2. "சாத்தான்" Says:

    அது நிஜமான கௌபாய் அல்ல. பழைய படங்களில் தமிழ்நாட்டு கிராமம் எதிலோ ஜெய்சங்கர் கருப்புத் தொப்பி அணிந்து குதிரை மேல் வருவாரே, அந்த ரகம். முதல் படத்தை வரைந்தது யாரோ ஓர் அமெச்சூர்தான்.

Leave a Reply