கேள்விகள்

இந்தப் படங்களெல்லாம் எங்கே கிடைக்கின்றன?

தமிழ்ப் புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் என்னிடமுள்ள மிகச் சிறிய தொகுப்பில் இருப்பவை. ஆங்கிலப் புத்தகங்களில் 90% என்னிடம் இருப்பவை. அவற்றை ஸ்கேன் செய்து ஃபோட்டோஷாப் உதவியுடன் முடிந்த அளவிற்கு மூல வடிவத்திலிருந்து மாறாமல் ஆக்கி இடுகைகளில் சேர்க்கிறேன். மீதமுள்ள தமிழல்லாத படங்கள் இணையத்தில் கண்ணில் பட்டவை, தேடி எடுத்தவை.

இந்த வலைப்பதிவு எதற்காக?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் பத்திரிகைகளும் புத்தகங்களும் படைப்புகளுக்கு அழகான சித்திரங்களை வெளியிட்டன. பொன்னியின் செல்வன் போன்ற தொடர்கதைகளுக்கு மணியம் போன்ற ஓவியர்கள் வரைந்த படங்களைத் தற்போதுள்ள ஓவியர்கள் வரைபவற்றோடு ஒப்பிட்டால் தரத்தில் மிகப் பெரிய வேறுபாடு தெரியும். வெகுஜன ஓவியக் கலை இப்போது சீரழிந்த நிலையில் இருப்பதில் சந்தேகமில்லை. வெகுஜன ஓவிய மரபை நினைவுகூர்வது, அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்த மாயா/ஃபோட்டோஷாப்/இல்லஸ்ட்ரேட்டர் யுகத்திலும் மேலை நாடுகளில் வெகுஜன ஓவியக் கலைக்கு இன்னும் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதற்கு சிறந்த உதாரணங்களைக் காட்டுவது ஆகியவை இந்த வலைப்பதிவின் குறிக்கோள்கள்.

______ என்ற பதிவில் ஆள் பெயர்/ஆண்டு/பத்திரிகை (அ) புத்தகப் பெயர் தப்பாக வந்திருக்கிறது

தயவுசெய்து மறுமொழியில் அதைச் சுட்டிக்காட்டுங்கள், அல்லது maiyaneerottam@ஜிமெயில்.காம் என்ற முகவரிக்கு எழுதுங்கள்!

படங்களுக்கு காப்பிரைட்?

படங்கள் வெளிவந்த புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் பெயர்கள் அந்தந்த இடுகைகளில் தரப்பட்டுள்ளன. அவைதாம் உரிமையாளர்கள்.

நான் சில கோடி ரூபாய் வருமானம் பெற்றுத்தரும் ஒரு பத்திரிகை/பதிப்பகம் நடத்துகிறேன். அதில் வெளியிட இந்த வலைப்பதிவிலிருந்து படம் எடுக்கலாமா?

இந்தப் படங்களை ஸ்கேன் செய்து ஃபோட்டோஷாப்பில் திருத்த நிறைய உழைப்பையும் நேரத்தையும் செலவழிக்கிறேன். கலை விரும்பிகளுடன் பகிர்ந்துகொள்வதற்காகவும் வெகுஜனக் கலை என்பது தரத்தில் குறைந்தது அல்ல என்று எடுத்துக்காட்டவுமே இந்த முயற்சி.

நீங்கள் இந்தப் படங்களுக்கு காப்பிரைட் வைத்திருக்கிறீர்கள் என்றால் படங்களுக்கு மிக்க நன்றி! உங்கள் கலைப்பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

பத்திரிகையில் கட்டுரைத் தொடர் எழுதி புத்தகமாகப் போடுவதற்கு (அல்லது அது போன்ற பிற வணிக நோக்கங்களுக்கு) பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் தயவுசெய்து இங்கே க்ளிக் செய்க.