சரித்திரம் அழைக்கிறது
இந்த அட்டைகளையெல்லாம் பார்த்தால் மனம் உற்சாகத்தில் நெகிழ்ந்து விம்முகிறது. ஸ்டாக் ஃபோட்டோ அட்டைப்பட யுகத்தில் நம் அட்டைப்பட ரசனை சிக்கித் தவித்தாலும் மணியம், வினு போன்றவர்கள் வரைந்த ஓவியங்கள் நம்மைத் தொடர்ந்து காப்பாற்றுகின்றன. படங்களை ஸ்கேன் செய்த புண்ணியம் சென்னைஷாப்பிங் டாட்காமைச் சாரும்.
அந்தக் கண்கள், அந்த எழுத்துரு… லதாவின் கைவண்ணம்.

இதுவும் வினு. கிட்டத்தட்ட அவரது ரசிகராகிவிட்டேன். அவர் மணியம் அல்ல, ஆனால் அவரது நோக்கமும் அதை நிறைவேற்றுவதில் உள்ள நேர்மையும் சிரத்தையும் கவர்கின்றன. மாருதி போல் அழகை லூசில் விட்டு சினிமாத்தனத்தை நாட மாட்டார் வினு.

Our மணியம்…

எழுத்துரு ராக்சு! ஆக்குநர் லதா.

இப்போது த டார்க் சைடு. பாவம் மணியம், உபயம் யாழினி ‘பதிப்பகம்’. கலைமாமணி என்ற பட்டமும் அட்டையின் அழகைக் கெடுப்பதில் பங்காற்றவில்லை? விக்கிரமனுக்குக் கீழே ஒரு கோடு வேறு. உடனடியாக பதிப்பகத்தை மூடவும்.















